பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, August 13, 2012

ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்


ஊத்துக்காடு வெங்கடகவியின் பல பாடல்களைப் படித்திருப்பீர்கள்; பாடக் கேட்டிருப்பீர்கள். இது ஒரு அரிய பாடல். கேட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் இப்போது படித்துப் பாருங்கள். பாடச்சொல்லி கேட்டுப் பாருங்கள். சைவ இலக்கியங்கள் பற்றிய இணைய தளத்தில் இதுபோன்ற அரிய செய்திகளைக் காணலாம்.

ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின்  ஸப்த ரத்னம்


ராகம்: பரஜு / பரஸ்    தாளம்: ஆதி
15ஆவது மேள ஜன்யம்

பல்லவி

ஆளாவ தென்னாளோ சிவமே உன்
அடியார்க்கடி யார்க்கு அடியனாய் மீளாத

அனுபல்லவி

கேளாதளிக்கும் வரமே அண்ட
மேலானதற்க்கும் பரமே இளம்
தாளான கமலமுட் புறமே பதம்

மத்யம கால ஸாஹித்யம்

ததிக்க தாம் என விதித்த தாளமும்
துதிக்க தான் என மதித்த கதிபெற

சரணம்

புன்மை பிறவி போக வேணும் எடுத்தால்
புண்ணிய பிறவிகள் ஆக வேணும்

இன்னவரில் ஒருவரை போலே ஸ்வர ஸாஹித்யம்

1. சீர்காழி மணம் சிவபாத மகன் திருநாவரசன்
மணிவாசக சுந்தரர் எனும்    (இன்னவரில்)

2. சிறுதொண்ட திருநீலகண்ட விறன்மின்ட
நமிநந்தி தண்டி அடிகள் எனும்   (இன்னவரில்)

3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாய கணம் புல்ல
நின்ற சீர் நெடுமாற கணநாத
முனையடுவாரோடு திருநாளைப்
போவார் எனும்      (இன்னவரில்)

4. மெய்ப் பொருளார் பெருமிழலைக் குறும்பர்
ஏனாதிநாத கலிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரையர் சடைய
சண்டேச கலிய காரியார் எனும்   (இன்னவரில்)

5. மானக்கஞ்சாற னேச பூசலாரொடு வாயிலார்
சோமாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக்கலயர்
இளையாங்குடி மாற அரிவாட்டாய கூற்றுவர்
கோட்புலி சாக்கியர் சத்தியர் சிறப்புலியர்
கழறிற்றறிவார் இயற் பகையர் எனும்  (இன்னவரில்)

6. திருமூல மூர்க்க மூர்த்தி அப்பூதி ருத்திர பசுபதியார்
இசைஞானியார் நீலநக்கர் இடங்கழியார்
அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனோடு
நீலகண்ட யாழ்பாண புகழ்ச் சோழ கோச் செங்கட்
சோழ கழற் சிங்கர் காரைக்கால் நகர் மேவு கனியாரொடு
கண்ணப்பர் குறிப்புத் தொண்டர் எனும்  (இன்னவரில்)

இன்னவரில் ஒருவரை போலே நான்
இனை ஒன்றும் இல்லா பதத்தினையாக வேனும் (ஆளாவ தென்னாளோ)

courtesy: Tamil Shaivite Page.

No comments: