பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, April 22, 2012

கையூட்டு

ஆசிரியரிடம் அடிவாங்க கை நீட்டிய பழக்கத்தால் செய்யும் பணியில் கையூட்டு வாங்க கை நீண்டதாம், சொல்கிறார் புருனெய் தனுசு. அப்படியும் இருக்குமா? சே! சே! ஆசிரியர் அடித்தது நம்மை நல்வழிப்படுத்த. நாம் கை நீட்டுவது தீமைக்கு வழிகாட்ட. இருந்தாலும் தனுசு அவர்களின் கற்பனையை ரசிப்போம் வாரீர்.

கையூட்டு 
+++++++++

அன்று 
சிறுவனாய் இருந்த போது
பள்ளி நாட்களில்
கணக்குப் பாடத்தை 
சரியாக செய்யாததால் 
வாத்தியாரிடம் கையை நீட்டுவேன் பிரம்படிக்காக.

அடி உதவியது போல்
அண்ணன் தம்பி உதவ வில்லை எனக்கு.
கையை நீட்டிப் பிரம்படி வாங்கியதால் 
கை நீட்டுவது வழக்கமாகி

இன்று
அலுவலகத்தில் பழக்க தோஷத்தில் 
கையை நீட்டுகிறேன் வரும்படிக்காக!
வாழ்கையை எட்டிப் பிடித்து விடுவேன்
வாழ்க என் கணக்குப்பாடம்!
வளர்க தொட்டில் பழக்கம்!

-தனுசு-

No comments: