பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 12, 2012

உலகம் மகிழ்வொடு வாழட்டும்!மரியாதைக்குரிய திரு என்.வி.சுப்பராமன் அவர்கள் சிறந்த கவிஞர். அகில இந்திய கவிஞர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு கவிதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வழங்கிக் கொண்டிருப்பவர். ஆயுள் காப்பீட்டுத் தாபனத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். நந்தன வருஷ தமிழ்ப் புத்தாண்டையொட்டி அவர் இயற்றியுள்ள இந்த கவிதையை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நந்தன ஆண்டு

நந்தன ஆண்டு பிறக்கட்டும்
நல்லன எல்லாம் மலரட்டும்
வந்தனை செய்து வரவேற்போம்
நிந்தனை தன்னை மறந்திடுவோம்!

அன்பும் அமைதியும் பெருகட்டும்
அறங்கள் அனைத்தும் வளரட்டும்
உழைப்பு நன்றாய் பெருகட்டும்
ஊழல்கள் அனைத்தும் மறையட்டும்!

நல்லவர் அரசு அமைக்கட்டும்
வல்லவர் நாட்டைக் காக்கட்டும்
தொல்லைகள் தொலைந்து போகட்டும்
அல்லவை தேய்ந்து மடியட்டும்!

உலகில் அமைதி ஓங்கட்டும்
பலரும் நேர்மை காக்கட்டும்
வளரும் கவிஞன் சிறக்கட்டும்
உலகம் மகிழ்வொடு வாழட்டும்!

என் வி சுப்பராமன்


3 comments:

 1. நந்தன ஆண்டு பிறக்கட்டும்
  நல்லன எல்லாம் மலரட்டும்
  வந்தனை செய்து வரவேற்போம்

  வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. நல்ல கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 3. சுப்பராமன் அவர்களின் கவிதை வரிகள் இன்றைய சூழலையும் சேர்த்து வந்து அழகூட்டியது.

  ReplyDelete

You can give your comments here