"நன்னெறி" பாடலின் 26ஆம் பாடல் முதல் 30ஆம் பாடல் வரையில் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் இந்தப் பதிவில் படிக்கலாம். தொடர்ந்து மீதமுள்ள பாடல்களும் வெளிவரும்.
26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெரியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்; - மடவரால்!
கண்ணளவாய் நின்றதோ? காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ? விளம்பு.
கடலின் பெருமை கடவார்; - மடவரால்!
கண்ணளவாய் நின்றதோ? காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ? விளம்பு.
அதுபோல நன்குக் கற்றுத் தேர்ந்த புலவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் சிறிய உருவம் படைத்தவரேனும் அவரை உருவம் சிறியது என்பதால் அவர் அறிவிலும் குறைந்தவர் என்றா எண்ணமுடியும்? அப்படிப்பட்டவர்கள் தங்கள் அறிவினால் சிறந்து விளங்குவதோடு பெரியவர்களாகக் கருதப்படுவார்கள், உருவம் போல சிறியவர் என்று எண்ணுதல் பேதமை.
27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்
கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர்
மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர்; - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.
தம்மால் இயலுதவி தாம்செய்வர்; - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.
28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்
முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர்; - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.
கனிவிலும் நல்கார் கயவர்; - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான்; எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.
மேலோர்கள் மூதறிஞர்களாக இருப்பவர்கள் மனமகிழ்ச்சியோடு இருந்தால்தான் கொடுப்பர் என்பதில்லாமல் அவர்கள் கோபமாக இருந்தாலும், பிறருக்குத் தேவையை மகிழ்வோடு நல்குவர். ஆனால் கீழோர் மனமகிழ்ச்சியில் இருந்தாலும்கூட எதையும் பிறருக்குத் தந்து உதவ மாட்டார்கள்.
29. ஆண்டவனின் அடியார்கள் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக – நடுக்கமுறார்;
பண்ணின் புகலும் பனிமொழியாய்! அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.
அடுக்கும் ஒருகோடியாக – நடுக்கமுறார்;
பண்ணின் புகலும் பனிமொழியாய்! அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.
அதுபோல இறைவனிடம் தன் உடல் பொருள் ஆவி நெஞ்சம் அனைத்தையும் ஒப்புவித்துவிட்ட அடியார்கள் தன் உடலுக்கு கோடிக்கணக்கில் துன்பங்கள் வந்தாலும் அதற்காக அஞ்சுவார்களா என்ன? மாட்டார்கள் அல்லவா.
30. உயிர் நீங்குமுன்பாக அறம்
செய்திடுக.
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
அதுபோல பிறந்தோர் அனைவரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும். அப்படி உயிர் போகும் நாள் வரை ஒரு தர்ம காரியமும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதை விட, ஒரு நாள் நாம் போகத்தான் போகிறோம், அதற்கு முன்பாக பிறர் வாழ நல்ல தர்மங்களைச் செய்து நற்கதியடைய முயற்சி செய்ய வேண்டும்.
1 comment:
தொடர்ந்து வாசிக்கிறோம். பயனுள்ள பதிவு. நன்றி.
Post a Comment