திருப்பராய்த்துறை பண்: மேகராகக்குறிஞ்சி
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறுசேர்சடை அண்ணலே. |
|
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர் பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை அந்தமில்ல அடிகளே. |
|
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார் பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை ஆதியாய அடிகளே. |
|
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர் பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை ஆலநீழல் அடிகளே. |
|
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர் பரவினாரவர் வேதம்பராய்த்துறை அரவமார்த்த அடிகளே. |
|
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர் பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை அறையநின்ற அடிகளே. |
|
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர் படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை அடையநின்ற அடிகளே. |
|
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால் பருக்கினாரவர் போலும்பராய்த்துறை அருக்கன்றன்னை அடிகளே. |
|
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர் பாற்றினார்வினை யானபராய்த்துறை ஆற்றல்மிக்க அடிகளே. |
|
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும் பருவிலாலெயில் எய்துபராய்த்துறை மருவினான்றனை வாழ்த்துமே. |
|
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ் செல்வமாமிவை செப்பவே.
திருச்சிற்றம்பலம்
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
பாரதி பயிலகம் வலைப்பூ
Monday, June 5, 2017
திருப்பராய்த்துறை பண்: மேகராகக்குறிஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பராய்த்துறைப் பெருமானின் பெருமைகளை அறிந்தேன். நன்றி.
Post a Comment