பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 1, 2014

பெருந்தலைவர் கு.காமராஜ்

கர்மவீரர், பெருந்தலைவர் கு.காமராஜ் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரைப் பற்றியதொரு நினைவுக் குறிப்பு இதோ. இன்னும் சில காலம் கழித்து நம் குழந்தைகளிடம் இப்படியும் ஒரு தலைவர் இங்கு வாழ்ந்தார் என்று சொன்னால் அவர்களால் நம்பமுடியுமா? ஆம்! அப்படியொரு தலைவர் இங்கு வாழ்ந்தார் என்பதே நமக்கெல்லாம் பெருமை. வாழ்க காமராஜ் புகழ்!

காமராஜ் காரை நிறுத்திய காவலரின் கதி!!!
1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.
திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.
“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.
அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.
காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார். 
அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.


2 comments:

 1. இதே போல்தான் லால் பகதூரும்...
  சரி அவர்கள் போல அற்புதத் தலைவர்கள் எங்கே போனார்கள்..

  ReplyDelete
 2. I loved as much as you will receive carried out right here.
  The sketch is tasteful, your authored material stylish.
  nonetheless, you command get bought an impatience
  over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly
  the same nearly a lot often inside case you shield this hike.


  My web blog: investment visa

  ReplyDelete

You can give your comments here