கவி காளமேகம் பாடல்கள்
காப்பு
|
|
1
|
ஏர்ஆனைக்
காவில்உறை என்ஆனைக்கு அன்று அளித்த
போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் - வாராத புத்திவரும்; பத்திவரும்; புத்திரஉற்பத்திவரும்; சக்திவரும்; சித்திவரும் தான். |
2
|
வெள்ளைக்
கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரேடு என்னைச் சரியா சனம்வைத்த தாய். .. |
3
|
பெருமாளும்
நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள் இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ! பருந்துஎடுத்துப் போகிறதே பார்! .. |
4
|
நச்சரவம்
பூண்டதில்லை நாதரே; தேவரீர்
பிச்சையெடுத்து உண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம் காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்க்கடல்போ லேமுழங்கும் மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்? . |
5
|
கத்துகடல்
சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம் இலையில்இட வெள்ளி எழும். . |
6
|
மூப்பான்
மழுவும், முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? - மாப்பார் வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ! எலி இழுத்துப் போகின்றது, ஏன்? . |
7
|
அப்பன்
இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு எண்ணும் பெருமை இவை. |
|
|
8
|
ஆடாரோ
பின்னைஅவர் அன்பர்எலாம் பார்த்திருக்க
நீடுஆரூர் வீதியிலே நின்றுதான்? - தோடுஆரூம் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் கைக்கே பணம்இருந்தக் கால்.. |
9
|
மாயனார்
போற்றும் மதுரா புரிச்சொக்க
நாயனார் பித்திஏறி னார்என்றே - நேயமாம் கன்னல்மொழி அம்கயல்கண் காரிகையாள், ஐயையோ! அன்னம்இறங் காமல்அலை வாள்.. |
10
|
காலனையும்
காமனையும் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ? - சீலமுடன் நாட்டிலே வீற்றிருந்த நாதரே; நீர் திருச்செங் காட்டிலே வீற்றிருந்தக் கால். |
11
|
நல்லதொரு
புதுமை நாட்டில்கண் டேன்; அதனைச்
சொல்லவா? சொல்லவா? - சொல்லவா? தொல்லை மதுரைவிக்கி னேச்சுரனை மாதுஉமையாள் பெற்றாள் குதிரைவிற்க வந்தவனைக் கொண்டு. |
12
|
கண்டீரோ?
பெண்காள்; கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்து பித்தனார் - எண்சிதைக்கும் மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார் அக்காளை எறினா ராம்! |
13
|
மாட்டுக்கோன்
தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ? குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள் கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்! |
14
|
நாட்டுக்குள்
ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின்
ஆட்டுக்கு இரண்டுகால் ஆனாலும், - நாட்டம் உள்ள சீர்மேவு தில்லைச் சிவனே; இல் ஆட்டைவிட்டுப்
போமோ,சொல்
வாய்! அப் புலி?
|
15
|
கொங்குஉலகும்
தென்தில்லைக் கோவிந்தக் கோன்இருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் செங்கையிலே ஓடு எடுத்த அம்பலவா; ஓங்குதில்லை உன்புகுந்தே ஆடுஎடுத்தது எந்தஉபா யம்? |
16
|
ஆடும்
தியாகரே! ஆட்டம்ஏன் தான்உமக்கு?
வீடும் சமுசாரம் மேலிட்டுக் -கூடிச் செருக்கிலினை யாடச் சிறுவர்இரண்டு ஆச்சே! இருக்கும்ஊர் ஒற்றிஆச் சே! |
17
|
வாதக்கால்
ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவுஆம்;
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்! வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார் எந்தவினை தீர்ப்பார் இவர்? |
18
|
தீத்தான்உன்
கண்ணிலே; தீத்தான்உன் கையிலே;
தீத்தானும் உன்தன் சிரிப்பிலே, தீத்தான்உன் மெய்எலாம்! புள்இருக்கும் வேளூரா; உன்னை இந்தத் தையலாள் எப்படிச் சேர்ந் தாள்? |
2 comments:
அருமையான பாடல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்//
எல்லாமே இரு பொருள் தரும் கவிகள்!.. அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால் கவி பொழிந்த காளமேகம் புகழ் தமிழ் கூறும் நல்லுலகில் என்றும் நிலைத்திருக்கும்!..
Post a Comment