மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள்
11-12-2012
புருனேய் தனுசுவின் கவிதைச் சரம்
(மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாளையொட்டி எழுதியுள்ள சிறப்புக் கவிதைகள்)
11-12-2012
புருனேய் தனுசுவின் கவிதைச் சரம்
(மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாளையொட்டி எழுதியுள்ள சிறப்புக் கவிதைகள்)
சோமாலிய சகோதரன்
+++++++++
வானும் மண்ணும் நமக்காக- அதில்
இனமும் மொழியும் எதற்காக.
வளமும் நலமும் வளர்க்கும் உலகில்
பட்டினி மட்டும் அவனுக்கா?
பசித்த வயிறு மரித்து கிடக்க -அங்கு
பட்டினி வயிறு தவழ்ந்து நடக்கும்.
அள்ளிப்போட கொள்ளி இல்லை -அங்கு
அன்னம் போட ஒருவருமில்லை.
எறும்பூரக் கல்லும் தேயும்- இவன்
எலும்புகளைப் பார்தால் கண்ணில் இரத்தம் பாயும்.
விண்ணில் விரையும் விண்கலம்-அவன்
விழியில் இல்லை ஓளிவளம்.
பணம் கொழுத்த குபேரனுக்குப்- போதையால்
மயக்கம், கைவிரலில் நடுக்கம் -தினம்
வெய்யிலில் முக்குளிக்கும் பஞ்சைக்குப்-பசியால்
மயக்கம், கைவிரலில் நடுக்கம்.
உலகமேன்மைக்கு சாட்சி வானுயர்ந்த கட்டடங்களா?-இல்லை
வற்றிய உடம்பில் ஒட்டிய உயிரின் கூட்டங்களா?
வல்லரசுகளின் வர்த்தக போர்முரசுகளா -இல்லை
பஞ்சத்தை எதிகொள்ளும் போராட்டங்களா?
வணங்கும் அன்னைக்கும் பிதாவுக்கும் தினங்கள் உண்டு.
கெடுக்கும் மதுவுக்கும் புகைக்கும் ஓர் தினம் உண்டு.
பட்டினிக்கும் ஒரு தினம் கண்டு,
அவனுக்கும் செய்வோம் இனிஒரு தொண்டு .
"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்".
பாரதி சொன்ன அதுவே நம் கொள்கை
பசியை உணர இதுவே எல்லை.
இன்றொரு வேளை புசிக்காதிருந்து -அந்தக்
கொல்லும் பசியை உணர்ந்திடுவோம்.
பாரதி பாட்டைப் புரிந்து கொள்வோம்-உலகோர்
பலருக்கும் அதை அறிய வைப்போம்.
+++++++++++++++
ஆங்கில மோகம் அதிகமாகிவிட்டது பணி செய்யும் இடத்தில பயன்படுத்தியே தீரவேண்டும் அது தப்பில்லை. ஆனால் வீட்டிலும் பிள்ளைகளிடமும் உறவினர்களிடமும் வெளியிலும் நண்பர்களிடத்திலும் தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுவது அதிகமாகிக்கொண்டு வருகிறது அதை மையப் படுத்தி இந்தக் கவிதை.
மீண்டும் வா... மகாகவியே
++++++++++++++++++++++++++++++
புதுக் கவிதைத்
தேரேற்றி வந்த
முதல் சாரதியே
உயிர் பாரதியே
உமக்கோர் குரு வணக்கம்
கல்லுக்கும் மண்ணுக்கும் முன்பாகத் தோன்றி
கவி சொல்லெடுத்து தந்த பெண்ணை
பட்டுடுத்தி பொன்போர்த்தி மாசறு தங்கமாய்
தந்தாய் தமிழாய்.
அன்று
அடிமையை அறுத்து குடிமை பெற
பாரதப் போருக்கு நீ பாடினாய் பாஞ்சாலி சபதம்.
இன்று
எங்களை மீண்டும்
தமிழுக்கு அடிமையாக்கி தலை வணங்க வைக்க - நீ
இன்னுமொரு சபதம் எடுத்து வரவேண்டும் .
ஈனப் பிறவிகளால் என் தமிழுக்கு இழுக்கு
சில்லறைக்கு நாவைவிற்கும் நவீன விலைமாதர்கள்
பால் குடித்த மார்பை அறுக்கிறார்கள்
தூங்க வாய்த்த தாலாட்டை தீயிலிடுகிறார்கள்.
பன்மொழிப் புலமை வேண்டும் -அதற்காக
என் பைந்தமிழ் பரலோகம் போகவேண்டுமா ?
பிற மொழியைப் பல்லக்கில் தூக்க
என் செந்தமிழ் செக்கிழுக்க வேண்டுமா?
"தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"
:வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்"
என்றுரைத்த வர்க்கத்தில் வந்தோம்
வந்தேன்ன செய்தோம்?
உள்ளுக்குள் எரிகிறது தணல்.
கொதிக்கிறது குருதி
அன்னையாம் தமிழின் நலம் இகழ்வோரின்
நாகருப்பேன் உயிர் நாடியையும் அறுப்பேன்.
மீசையை முறுக்கி
மீண்டும் என் தமிழை
தாயாய் மூச்சை அகண்ட காவிரியாய்
தலையில் வைத்துக் கொண்டாட
மீசைக் கவிஞனே மீண்டும் வா.
இன்னும் ஒரு சபதம் பாடி வா.

3 comments:
அருமையான கவிதை...புதுமை கவிஞர் "பாரதியார்"யின் நடையிலேயே புருனேய் தனுசுவின் கவிதையும் புதுமையுடனும்,உணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் இருந்தது...
////உலகமேன்மைக்கு சாட்சி வானுயர்ந்த கட்டடங்களா?-இல்லை
வற்றிய உடம்பில் ஒட்டிய உயிரின் கூட்டங்களா?
வல்லரசுகளின் வர்த்தக போர்முரசுகளா -இல்லை
பஞ்சத்தை எதிகொள்ளும் போராட்டங்களா? ////
///பன்மொழிப் புலமை வேண்டும் -அதற்காக
என் பைந்தமிழ் பரலோகம் போகவேண்டுமா ?
பிற மொழியைப் பல்லக்கில் தூக்க
என் செந்தமிழ் செக்கிழுக்க வேண்டுமா? ///
மனித நேயமும், தமிழ் மொழிப்பற்றும் பாரதியின் உயரிய குணங்கள் அதைப் பிரதிபலிக்கும் இவ்வரிகள் அருமை.
கவிஞருக்குப் பாராட்டுக்கள்.
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.
"பாரதியார்"யின் நடையிலேயே புருனேய் தனுசுவின் கவிதையும் -நன்றி ஷோபனா அவர்களே.
மனித நேயமும், தமிழ் மொழிப்பற்றும் பாரதியின் உயரிய குணங்கள் அதைப் பிரதிபலிக்கும் இவ்வரிகள் அருமை.
கவிஞருக்குப் பாராட்டுக்கள்.- நன்றி தமிழ் விரும்பி அவர்களே
Post a Comment