பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 12, 2011

அமைதி


'பொன்னை விரும்பும் பூமியிலே 
என்னை விரும்பும் ஓர் உயிரே"
என்று பாடினார் கவியரசர்.

எங்கோ எட்டாத தொலைவில்
பிழைப்பு நாடி சென்று
ஊரை, உறவை, நட்பை
விட்டு விலகி நிற்கும் நமது
அன்பு புருனெய் தனுசுவின்
மனத்தின் ஏக்கம் என்ன? அவர்
பெற விரும்புவது எது? இதோ
அவரது கவிதை!

 அமைதி தரும் தாய்  நிலா

என்னுள்  ஒரு  கலக்கம்.  
எனக்குள்  ஒரு  ஏக்கம்.  
என்ன  வேண்டும்  எனக்கு?  
என்ன  குறை  எனக்கு ?
எங்கும்   தேடினேன்  கிடைக்கவில்லை. 
என்னவென்றும் தெரியவில்லை.
ஏன் இந்த கலக்கம்.
எதை தேடுது என் உள்ளம்
?


ஆனால்
 நள்ளிரவில்...
நீந்திவரும்  நிலவை பார்கையில் ஓர்  அமைதி! .
அதன் பேரொளி படுகையில் பேரமைதி!!. 
என் உணர்வும் திரும்புகிறது. 
என் தேடலும் தெரிகிறது. 
அது 
அமைதி எனவும் புரிகிறது

 வெளிச்சம்  போட்ட  .
வி
ண்வெளி  விளக்கே  
விடையும் கொடுத்தாய் எனக்கே .

நான் தேடும் அமைதியை     
எனை
த் தேடி வந்து தரும்
வெண்ணிலவே 
நீ  என்  தாயே !   
                               - தனுசு -

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

நள்ளிரவில்...
நீந்திவரும் நிலவை பார்கையில் ஓர் அமைதி! .
அதன் பேரொளி படுகையில் பேரமைதி!!.
என் உணர்வும் திரும்புகிறது.
என் தேடலும் தெரிகிறது.
அது
அமைதி எனவும் புரிகிறது

அருமையான வரிகள்!

Unknown said...

தாயருகே இல்லாது போனாலும்
தாயின் மடியிலே அமர்ந்தே
தாலாட்டோடு கண்ட நிலவே
தாயாய் வந்ததோ புலவோய்!...

கவிதையும் கற்பனையும் நன்று..
வாழ்த்துக்கள்.

thanusu said...

அய்யாவுக்கு நன்றி .

கவிதையை ரசித்த ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் நன்றி.