பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 31, 2011

விடியலுக்கு வாழ்த்துக்கள்

   விடியும் விடியலுக்கு வாழ்த்துக்கள் 
         ++++++++++++++++
புத்தாண்டின் விடியலிலே
புது பாதை தேடும்  என்தோழா- உனக்கான 
முகவரிகள்  செய்யும்  பொழுதினிலே ...

முட்டுக்கட்டை போடும்-எந்த 
முகம்தெரியா தடைகண்டும் 
மூச்சடைத்து நிற்காதே. உன் பார்வையை மாற்றாதே.

நித்தமும் தடைகள். 
மொத்தமும்  தோல்விகள் .  
எதிலும் ஏமாற்றங்கள். 

இந்த வேதனை எனும் சோதனையை
 நீ சோதித்தால்
அவைசொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள் 
தெரிந்து கொண்டால் 
பாதைகள் பணிந்துவிடும்.

 உன்னை சூழும் நெருப்பை-நீ 
 அள்ளிப் போட்டு தின்றால்  -அங்கோர்
 உலகம் உன்னைக் கண்டு உதித்துவிடும்    .

எண்ணித் துணிந்தால் கருமம் .
உன்னுள் தேவை  வன்மம்-இருந்தால் 
ஜெயமே  இந்த ஜென்மம்.

 -தனுசு-

2 comments:

 1. ///நித்தமும் தடைகள்.
  மொத்தமும் தோல்விகள் .
  எதிலும் ஏமாற்றங்கள்.

  இந்த வேதனை எனும் சோதனையை
  நீ சோதித்தால்
  அவைசொல்லாமல் ஓடிவிடும்.///

  சோதனையைச் சோதித்தால் சாதிக்கலாம் என்றரும்
  போதனை தந்தகவியே வாழீ!..

  அருமையானக் கவிதை அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  http://tamizhvirumbi.blogspot.com/2011/12/blog-post_30.html

  நன்றிகள் ஐயா!

  ReplyDelete
 2. அய்யா அவர்களுக்கும்,மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  நன்றி தமிழ் அவர்களே.

  ReplyDelete

You can give your comments here