பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 6, 2011

தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா

                          மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா  

அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையமும் திருவையாறு பாரதி இயக்கமும் இணைந்து தஞ்சையில் மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். விழாவிற்கு வழக்கறிஞர் வீ.சு.இராமலிங்கம் தலைமை தாங்கினார். திருவையாறு கட்டளைத் விசாரணை முனைவர் குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அருளாசி கூறி துவக்கி வைத்தார். அகில இந்திய வானொலியின் திருச்சிராப்பள்ளி நிலைய இயக்குனர் திரு வி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
Besant Lodge, Venue

காலையில் நடைபெற்ற "வான்புகழ் கொண்ட பாரதி" எனும் தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு முனைவர் இரா.கலியபெருமாள் தலைமை வகித்தார். கருத்தரங்கில் 'பாரதியாரின் பாஞ்சாலி' எனும் தலைப்பில் வெ.கோபாலன், 'பாரதியார் விரும்பிய சமூகம்' என்ற தலைப்பில் குப்பு.வீரமணி, 'பாரதியாரும் இசையும்' எனும் தலைப்பில் முனைவர் ப.உமாமகேஸ்வரி, 'பாரதியின் தேசியம்' எனும் தலைப்பில் ந.விச்வநாதனும் உரையாற்றினர். தலைவர் இரா.கலியபெருமாள் 'தமிழிலக்கிய வழியில் பாரதி' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
Dr.Umamaheswari, Kumaraswamy Thambiran, Prof.Kaliaperumal & AIR Station Director

பிற்பகல் மூன்று மணிக்கு திருவையாறு அரசு இசைக்கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் பங்குகொண்ட இசை அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவிகளும் இணைந்து பாடியது கேட்போர் மங்களை நெகிழ வைப்பதாக அமைந்திருந்தது.
Dr.Kumaraswamy Thambiran Swamigal

தொடர்ந்து மாலை 4-30 மணிக்கு "பாரதியாரின் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது, வேண்டுதலா, விடுதலையா" எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறது. பட்டிமன்றத்துக்கு புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமை தாங்கினார். வேண்டுதல் எனும் தலைப்பில் பேராசிரியர் மாது, முனைவர் தமிழரசி, மற்றும் இராமநாதன் ஆகியோரும், விடுதலையே எனும் தலைப்பில் பாரதிநேசன், கவிஞர் சாமி.நிர்மலா, முனைவர் இரா.காமராசு ஆகியோர் உரையாற்றினர். பாரதியார் ஆன்மீகப் பாடல்களில் மேலோங்கியிருப்பது விடுதலையே என்று தீர்ப்பளித்து தலைவர் முத்துநிலவன் உரையாற்றினார்.
Bharathi Ilakkiya Payilagam Director Ve.Gopalan

மாலை நடந்த நிறைவு விழாவுக்கு சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அவர் "பாரதியின் தத்துவப் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். விழாவின் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த "அமுதசுரபி" பத்திரிகையின் ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் "எக்காலத்துக்கும் பாரதி" எனும்தலைப்பில் பேசினார். தமிழ் எழுத்துலகில் பாரதிக்கிருந்த சிறப்பிடத்தையும், பாரதி எந்த காலத்துக்கும் பொருந்துபவனாக பரந்த விசாலமான பார்வை கொண்டவன் என்றும் அவர் பேசினார். எந்தக் காலத்திலும் பாரதி தான் வறுமையில் இருப்பதாக உணர்ந்தவனுமில்லை, அதற்காக வருந்தியவனுமில்லை என்றார் அவர். ஆனால் இன்று பல சிறந்த எழுத்தாளர்களின் இறுதிக் காலம் வறுமையில் முடிவடைகிறது. தமிழ்கூறு நல்லுலகம் எழுத்தாளர்களை அந்த நிலைமைக்குத் தள்ளிவிடக்கூடாது என்பதை பல நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசினார்.
Sekkizhar Adippodu Dr.T.N.R. & Tiruppur Krishnan

திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் கீழப்பாவூர் சண்முகையா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். திருவையாறு பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன் நன்றி கூறினார்.
Tiruppur Krishnan speaks & Dr.TNR observing

6 comments:

 1. தஞ்சையில் பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள் விழா அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. மகாகவிக்கு ஒரு இனியவிழா!
  மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
  மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
  மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!

  கவிதை வானில் அவன் கவிநிலா,
  காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
  வேதங்கள் புதுமைச் செய்த கலா!
  வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!

  அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
  வெடித்து தேனிலே நனைந்தச்சுளா!
  அடிமைத் தலையை அசைத்ததிலா
  ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா

  அன்னைத் தமிழை போற்றியதிலா
  அகிலமும் உயரற எண்ணில்லா
  அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா
  மகாகவி இவனோ உலக கவிஉலா!

  யுகபுருஷன் இவன் புகழ்
  வாழிய! வாழிய!! வாழியவே!!!

  ReplyDelete
 3. ஆஹா மகா கவிக்கு இனியதொரு விழா! சேக்கிழார் அடிப்பொடி திருராமச்சந்திரன் அவர்கள் சொற்பொழிவை சிறுமியாய் இருந்தபோது கேட்டது...மிக்க மகிழ்ச்சி உங்கள் வலைப்பூவில்
  பாரதியின் மணம் மட்டுமே இருப்பதில் இனி அடிக்கடி இங்கு வருவேன்,நன்றி

  ReplyDelete
 4. vaazhga pallaandu,thodarga unathu pani, vaazhiya vaazhiyave.
  enathu thandhai thiru.v.gopalan avargal urai nigazhthum kaatchi kandu manam maghizhvutren,
  nandri,
  suresh,
  mozambique.

  ReplyDelete

You can give your comments here