பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, October 21, 2011


Visu Iyer



தீர்ந்திடும் துன்பம் எல்லாம்......

கந்தன் திருநீறு அணிந்தால் 
கண்ட பிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி 
குடும்பத்தை நாடி வரும்

சுந்தர வேல் அபிஷேக 
சுத்தத் திருநீறு அணிந்தால்

வந்து அமர்ந்த மூத்வளும் (மூதேவிளை குறித்தது)
வழி பார்த்து போய்விடுவாள்

அந்த நேரம் பார்த்து வந்து
அன்னைச் செல்வம் ஓடி வந்து

சிந்தையை குளிர வைத்து 
சொந்தம் கொண்டாடிவாள்

மணம் மிகுந்த சாம்பலிலே 
மகிமை இருக்குதடா

மணமுடன் அணிபவருக்கு
மகிழ்ச்சியை பெருக்குதடா

தினம் தினம் நெற்றியிலே
திரு நீறு அணிந்திடடா

தீர்ந்திடும் துன்பமெல்லாம்
தெய்வம் துணை காட்டுமடா



துதிக்க 
மறு பிறப்பினை தவிர்க்கும் என சொல்லும்
இந்த கந்தர் அலங்கார பாடலை துதிப்போமே..

முடியாப் பிறவிக் கடலில் புகார் முழுதும் கெடுக்கும்
அடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் 
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே




பகை மாறி உறவாடுமே...


முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
முருகா

உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று 
இனிதுற மெத்த இன்பம் சேருமே

குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
குறைகள் யாவும் போகுமே- அவர் 
குடும்பம் தழைத்தோங்குமே 

உர சமர வேலாயுதம் 
பக்கத் துணை கொண்டால்
சகல பயம் தீருமே

அறுமுகனை வேண்டி ஆறாதனை செய்தால்
அறுதி ஓடி வருவார் - அன்பு 
பெருகி அருள் புரிவார்

அந்த கருணை உருவான 
குருபரன் என்றுமே
கைவிடாமல் ஆடுவார்

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கை கூடுமே
"பகை மாறி உறவாடுமே"

சிவ மைந்தன் அருளாலே
"மெய்றிவு உண்டாக்கி"
மேன்மை உயர்வாகுமே

 அன்பு வழி வாழவைக்கும் மருந்து



முருகன்

திருநீறில் மருந்து இருக்கு தெரியுமா...அதை
தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா..

ஆறு மணக்கும் அய்யனின் திருமருந்து நல்ல
அறிவு கண்ணை திறந்து வைக்கும் அரு மருந்து

"அன்பு வழி வாழ வைக்கும் பெரு மருந்து" நல்ல
ஆசி எல்லாம் நமக்கு என்றும் தரு மருந்து

சண்டியரை சத்து வழியில் நடத்தும் மருந்து
இளம் காளையரை காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையருக்கு மழலை செல்வம் கொடுக்கும் மருந்து திரு
மங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

கற்பனையில் கவிதை பாட செய்யும் மருந்து பெரும்
கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து நம்
வாழ்வில் நல்ல செல்வம் எல்லாம் சேர்க்கும் மருந்து


ஆறுகள் எல்லாம் இணைந்தது ஒன்றாகும்


செந்துர் செல்லும் தென்றல் காற்றே முருகனை காண்பாயோ அவன் 
சேவடி நிழலில் சேர்ந்திட நானும் வருவதை சொல்வாயோ

ஓடிடும் போதும் என் குறை கேட்க ஒரு நொடி நில்லாயோ துணை
தேடிடும் ஏழை நான் வரும் சேதி அவனிடம் சொல்லாயா

நால் வகை பாடல் மல்லிகை முல்லை நறுமணம் உன்னோடு வெறும் 
ஆசைகள் துன்பம் ஆயிரம் இங்கே அடியவன் என்னோடு

ஆழ்கடல் கூடும் "ஆறுகள் எல்லாம் இணைந்தது ஒன்றாகும்"
நல்ல தாய் மணம் கொண்ட வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்

1 comment:

வேப்பிலை said...

அனுப்பி வைத்த முருகன் பாடல்களை
அப்படியே வலையேற்றியமைக்கு நன்றிகள்

கந்த கடவுள் நம்
சொந்த கடவுள் என

துதி செய்யும் அனைவருக்குமே
மதி திருத்தி வாழ்வு தரும் அப்பெருமானை

ஷஷ்டி திருநாள் தொடக்கத்தில் அய்யருக்கு
இஷ்டமான இந்த கந்தரலங்கார பாடலை

ஏற்றுகிறோம்.. இங்கு
போற்றுவோம் கந்தனை வாருங்கள்

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
செந்தமிழ் நுல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனை கந்தக் கடம்பனைக் கார் மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்கு ஒரு தாழ்வில்லையே