பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 5, 2011

மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்!


 மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்!
X
Inbox
X

ReplyReply
More
G Alasiam 



இன்றையப் பதிவு படிப்பதற்கு முன்பே நேற்று தங்களுக்கு ஒருக் கடிதம் எழுதியுள்ளேன்... அதிலே ஓரிரு வரிகள் இந்த பதிவை ஓட்டியக் கருத்து எதேச்சையாக அமைந்தது எனக்கு வியப்பை அளிக்கிறது... மகாகவியை ஆழ்ந்து, உணர்ந்து படிப்பவன் அவனின் கொள்கை குணங்களில் நனைந்து அவனின் பாணியிலே பயணிப்பது இயல்பே.. அதற்கு ஒரு உதாரணம் தாங்களே என்றும் தயங்காமல் கூறுவேன். 

இன்னொன்றையும் மிகவும் அடக்கத்துடன் கூறுவேன்...  இந்த வரிகளைப் படிக்கும் போதே பாரதி எதைக் குறிப்பிட்டு கூறியிருப்பான் என்பதை நான் யூகித்து பதிலை மனதில் கொண்டே பதிவை கீழேப் படித்தேன் தாங்களும் அதையே விளக்கமாக கூறி இருப்பதைக் கண்டும் வியந்தே! இருந்தும் இது தான் பாரதியின் விசுவாசிகளுக்குள் உள்ள ஒற்றுமை எண்ண அதிர்வு சிந்தனை எதேச்சையாக ஒரே மாதிரியாக அமைகிறது என்பதையும் உணர்ந்தேன். 

தங்களின் அளவிற்கு அவனைப் படிக்காவிட்டாலும் தங்கள் மூலம் அவனைப் படிக்கிறேன் என்ற உரிமையில் உங்களின் வரிசையில் உங்களுக்கு பின்பக்கமாக நிற்கிறேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன். அதனால் பெருமையும் அடைகிறேன்.

பதிவில் உள்ள கருத்தும், அதனின் தங்களின் தெளிவும், அதனால் விளைந்த முடிவும் அருமை...நிச்சயமாக தாங்கள் கூறுவது போல் 
மகாகவி பாரதி யாவருக்கும் சொந்தம் தான் அப்படி நாம் சொல்லிக் கொள்வதால் அவன் கூறுவது போல் "ஒரு கர்வம் பிறக்கிறது" அவனுக்கு முன்பு தோன்றியவர்கள் போல் அவ்வுலக வாழ்க்கையை மட்டும் கூறாமல் அல்லது அவ்வுலக வாழ்க்கைக்கு இவ்வுலக வாழ்க்கையை எப்படி செய்ய வேண்டும் என்று மட்டும் கூறாது... 

இன்றைய உலகில் வாழும் முறையை உலகத்தோடு அதன் இயல்பை, சரியாகப் புரிந்துக் கொண்டும்; தொன்மையைக் கண்டுப் பயப்படாமல்... அதன் உண்மையை விதியினை தெரிந்து அதன் தன்மையை பகுத்தறிந்து அதிலும் அதன் நுனியளவு சென்றுத் தெரிந்துக் கொண்டு அவசியப்பட்டால்... அது வேதமானாலும் அதிலே புதுமையை செய், தோல்வியைக் கண்டு பயப்படாதே, மீளுமாறு நீ உணர்ந்து செயல் படு.. அப்படி நினைக்கும் போது உன் நினைவு எதுவோ அதுவே நீயாவாய்.... 

நீதி நூலும், வான நூலும், உலோக நூலும் நித்தம் படி, அதை ஒரு தவம் போல் செய்... வீரியத்தைப் பேருக்கு, ஆண்மை கொள், நாளெல்லாம் வினை செய், பெரிதிலும் பெரிது கேள், பெரிய கடவுளும் காக்கும் (ஒரேக் கடவுள் சிறு தெய்வ வழிபாடை பெரிதாக வளர்த்து நமக்குள் பிரிவுகள் வேண்டாம் என்பதே அவனின் எண்ணம் / அப்பரும் அதையே கூறி இருக்கிறாராம்).  இதை அத்தனையும் அவன் ஒட்டு மொத்த மானிடத்திற்கும் கூறி இருக்கிறான்... இதிலே, இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், என்று அந்த மதப் புனித நூல்கள் அவரவருக்கு கூறியது போல் அதன் கொள்கைகளை கடைபிடிப்பவர்களுக்கு கூறியிருப்பது போல் தனிப்பட்ட யாருக்கும் கூறாமல்... வேதம் என்பது கூட அவரவர் வேதம் என்றேப் பொருள் கொள்ளவேண்டும்....

அப்படி இருக்க, இந்த மகாகவி, நம்மையெல்லாம் உய்விக்க வந்த மாதவன், யாருக்கு சொந்தம் என்றால்? யாவருக்குமே சொந்தம் தான்... அவனின் முழு உரிமையும் இந்த மானிடம் உள்ளவரை அது (மானிடம் முழுவதும்) பெற்றிருக்கும். 

இருந்தும் இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். அவனின் கொள்கைகளை பெண்டிர் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும், பின்பற்ற வேண்டும். அப்போது தான் அது மிக விரைவாக எங்கும் பரவும். யாவரையும் சென்றடையும்... தையலை உயர்வு செய்"யச் சொன்னதோடு, புதுமைப் பெண் அவள் வேதம் புதுமை செய்பவள் என்றும் பாடியதின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சாதி அடிப்படையிலே சமூகத்தில் சலுகைக் காட்டி பொருளாதாரத்தில் தாழ்வுற்று இருப்பவருக்கு நல்லது செய்வதாகவும், கல்வி அறிவு அதிகம் பெறாத சிலருக்கு சலுகை அடிப்படையிலே கல்வி தருவதாகவும் கூறி கண்காணிப்பும், தணிக்கையும், அதன் அவசியத்தையும் சோதிக்காமல்; அவசியப்பட்டால் அதில் ஏதும் மாற்றம் கொள்ளச் செய்யாமல் வரும் அரசுகள் தொடரும் அந்த பணியினும் சிறந்த அவசியமான ஒருப் பணி உண்டு... 

ஆம், அது தான் பாரதி சொன்ன "தையலை உயர்வு செய்" அவர்களுக்கு தனிப் பிரிவு கொண்டு சலுகை செய்து, அவர்கள் சமூகத்தில் (எல்லா சாதியிலும் இது பொது தான்) படும் அவலத்தை போக்கி கல்வியையும் ஞானத்தையும் வளர்க்கும் வழியை ஆளும் அரசுகள் செய்யவேண்டும். 

அது நடக்கும் வரை பாரதியின் திட்டம் செயல் படுவது தடைபட்டே நிற்கும். அதோடு, அவனின் பாடல்கள் மேடை அலங்கார பேச்சிற்கு மட்டுமே பெரிதும் துணை நிற்கும் எனபதே உண்மை. இந்த அவலம் மாற, பெண்கள் வெறும்காட்சிப் பொருளாகவும், ஏமாற்றப் படுபவர்களாகவும், ஆடுகளைப் போல் அண்டிப்பிழைப்பவர்களாகவும், அடிமையாகவும், மோக போகப் பொருள்களாகவும், கலைக் கூடங்களிலே அறிவில்லா பொம்மைகளாகவும் இருப்பதை உணர்ந்து அந்நிலை மாற... அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 

அது இந்த சமூகத்தில் பெரிய விஞ்ஞானிகளையும், மெஞ்ஞாநிகளையும் பெற்று வளர்த்து ஆளாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு என்பதை பாரதி கூறிய வழியிலே உணர்ந்து அதற்கு தன்னை ஆயுதப் படுத்த வேண்டும். அதை செய்ய உண்மையான உயர் கல்வி கற்க வேண்டும், அப்படி அதைப் பெரும் போது அறிவோடு, வீரமும், விவேகமும், உலக ஞானமும் கிடைக்கும். அப்படி ஒவ்வொருப் பெண்ணும் உலக ஞானம் பெற்றால், அங்கே மூடத்தனமும், அடிமைத்தனமும் ஒரு சேர அழியும் அப்போது புதிய தோர் உலகம் படைக்க அதாவது கிருத யுகம் படைக்க ஒவ்வொரு வீட்டிலும் மகா புருஷர்கள் அவதரிப்பார்கள் என்று தீர்க்கமாக கூறி விட்டு அதைக் காண இங்கே இயற்கையில் கலந்து நிற்கிறான் பாரதி...

இதை நாம் ஒவ்வொருவரும், இந்த அரசாங்கமும் உணரவேண்டும்.... அப்படி செய்தால் வெகு சீக்கிரத்தில், சாதி ஒழிப்பும் தேவை இல்லை.. சமூக சீரமைப்பும் தேவையில்லை, இலவசமும் தேவை இல்லை, இட ஒதுக்கீடும் தேவை இல்லை.... எல்லாம் தானாக நடக்கும். 

சக்திப் பெண், இயக்கம் பெண், இயங்க வைப்பவள் பெண், அந்த இயக்கம் சீராகும் போது அத்தனையும் சீராகும்.. இது தானே! வேறு யாரும் (இவனுக்கு முன்பு தோன்றியவர்கள், இவனே இவர்கள் தாம் எனது முன்னோடிகள், பெரியவர்கள் என்று போற்றியவர்களும் கூட) ஒரு உறுதியானத் தீர்வை அதற்கு முன்னதாக எங்கும் கூறாத தீர்வை இந்த எட்டயபுரத்து ஞானக் கிறுக்கன் சொல்லி இருக்கிறான். 

தாங்கள் கூறியது போல் அவன் எல்லோருக்கும்; இந்த உலக மானுடர்கள்... ஏன்? சொந்த, பந்தங்களோடு, பகைவனையும் மட்டுமல்லாது; ஆடு, மாடு, காக்கை, குருவி என்று எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தக்காரன்... அவனை கேட்டிருந்தால் யாமே! இந்த உலகைப் படைத்தோம்!... அப்படி இருக்க இவைகள் யாவும், இந்த உலகம் யாவும் எனது சொந்தம் என்றே சொல்வான். 

உங்களின் நல்ல பதிவு.... உங்களின் மிக நல்ல முடிவு.... எனது கருத்தும் உங்களின் கருத்திற்கு வலு சேர்க்கும். வாய்ப்புக்கு நன்றிகள் ஐயா!

அன்புடன்,
ஆலாசியம் கோ.

வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!

No comments: