பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, October 17, 2011

தஞ்சாவூர் திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி






ஹரிகதா விற்பன்னர்
தஞ்சாவூர் திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி

தஞ்சையைச் சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான திருமதி டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்களுக்கு 80 வயது ஆவதை முன்னிட்டு தஞ்சை ஸ்ரீ தியாகபிரம்ம சபாவின் சார்பில், அதன் தலைவர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் 19-10-2011 அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் அன்னாருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். டி.ஆர்.கமலாமூர்த்தி அவர்கள் ஹரிகதா கலைக்கு புத்துயிர் கொடுத்து, பலகாலம் இந்த அரிய கலையை நாடெங்கிலும் நடத்தியவர். தற்போது தனது வாரிசாக அவருடைய பேத்தி செல்வி சுசித்ரா அவர்களை (இவர் ஒரு நல்ல கர்நாடக இசைக் கலைஞரும்கூட) ஹரிகதை உலகுக்கு அளித்திருக்கிறார். அவர் நீடுவாழ இறைவனைப் பிரார்த்திக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கே அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். (ஆக்கியவர் ஹரிகதா தஞ்சை என்.ஸ்ரீநிவாசன் அவர்கள்.)

"பூலோக கைலாயம், தெரிசிக்கமுத்தி என்றெல்லாம் போற்றப்படும் தில்லைப்பதியான சிதம்பரத்துக்குஅருகேயுள்ள லக்ஷ்மிகுடி எனும் கிராமத்தில் ராமச்சந்திர அய்யர் - சீதாலக்ஷ்மி என்ற தம்பதியரின் மூத்த குமாரியாக 9-4-1932 அன்று பிறந்தார் கமலாமூர்த்தி. தர்மஸம்வர்த்தனி என்ற தங்கையும், நடராஜன் என்ற தம்பியும் இவருக்கு உண்டு. சின்னஞ்சிறு வயதிலேயே சிதம்பரத்திலுள்ள தன் தாய்மாமா வீட்டுக்கு வந்து அங்கே வளர்ந்து வந்தார் கமலா. இனிமையான குரலும், இசையில் ஆர்வமும், தெளிவான உச்சரிப்பும் பெற்றிருந்த கமலாவை ஒரு கதாகாலக்ஷேபக் கலைஞராக்கிவிட வேண்டுமென, கமலாவின் மாமா எண்ணினார். எனவே சிதம்பரத்திலிருந்த ராஜா பாகவதரிடம் கமலாவை ஹரிகதைக் கலைஞராக்கும் பொறுப்பை அவர் ஒப்புவித்தார்.

தன் ஒன்பதாம் வயதில், சிதம்பரத்தில் நடராஜ தீக்ஷிதர் என்பவரின் இல்லத்தில் கமலா, "வத்ஸலா கல்யாணம்" என்ற ஹரிகதையோடு அரங்கேறினார். ராஜா பாகவதர் அந்த ஆண்டின் இறுதியில் காலமானதால், மேலும் பல சரித்திரங்களைப் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காமற் போயிற்று. கமலாவின் தந்தை ராமச்சந்திர அய்யர் சில மாதங்கள் கழித்துக் குடும்பத்தோடு திருவையாற்றுக்கு வந்து வசிக்கலானார். இதனால் திருவையாற்றிலிருந்த அண்ணாசாமி பாகவதரிடம் தன் ஹரிகதைப் பயிற்சியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றார் கமலா. இராமாயணம் மற்றும் நாயன்மார் சரித்திரங்களைக் கற்பித்தார் அண்ணாசாமி பாகவதர்.

1948ஆம் ஆண்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை மணந்து இல்லறத்தில் அடிவைத்த கமலா, தன் கலையை இடையூறு சிறிதுமின்றி தொடருவதற்குக் கணவர் கிருஷ்ணமூர்த்தி ஒத்துழைத்தார். ஹரிகதைத் தொடர்பான பல அரிய செய்திகல், முறைகள், சில சரித்திரங்கள், நிரூபணங்கள் ஆகியவற்றைக் கமலா மூர்த்திக்கு எம்பார் விஜயராகவாச்சாரியார், தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேயர், என்.வி.வெங்கடசுப்பிரமணிய சாஸ்திரிகல் ஆகியோர் கற்பித்தனர்.

இந்திய நாட்டின் பல பகுதிகளில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான நாடுகளிலும் கமலாமூர்த்தி ஹரிகதை நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளார். இவருடைய கதைகளில் இசை முக்கிய இடம் பெற்றுக் கேட்போரைப் பெரிதும் கவர்ந்தது. கம்மலான குரலைக் கொண்டிருந்தாலும், ராகங்களின் ஜீவன் எடுத்த எடுப்பிலேயே வெளிப்படும்படியான இசை ஞானம் கமலாவுக்கு உண்டு. அவர் பாடும் முறை, அவருடைய குருவான அண்ணாஸ்வாமி பாகவதரை நினைவூட்டும்படியாக இருக்கும்.

திருவையாறு கண்ணன், மணல்மேல்குடி ஸ்ரீநிவாஸ சாஸ்திரிகள், இவ்விருவரில் ஒருவர் கமலாவுக்கு சாதகராக இருந்து வந்தார். பிறகு பின்பாட்டுக்காரரை வைத்துக் கொள்ளாமல் தஞ்சை விஸ்வநாதன், ஸ்ரீரங்கம் நாராயண ஐயங்கார், கோவை கைலாஸ பாகவதர் ஆகியோரில் ஒருவரது ஹார்மோனியத்துடன் கதைகள் சொல்லி வந்தார். அவருக்கு மிருதங்கம் வாசித்தவர்களில் தஞ்சை கிருஷ்ணமூர்த்தி நாயுடு (குருவப்பா) சேலம் ஏ.ஜனார்தனன், மகர்நோம்புச்சாவடி ஸம்பங்கி கோபால பாகவதர், தஞ்சை என்.ராஜம் அய்யர் ஆகியோரைக் குறிப்பிடலாம். தற்காலம் எம்பார் விஜயராகவாச்சாரியாரின் இளவல் லக்ஷ்மிநரசிம்ஹன் வாசித்து வருகிறார்.

"கலைமாமணி" (26-1-1978) சென்னை ஸங்கீத வித்வத் சபையின் டி.டி.கே. நினைவு விருது, சுந்தர்ராஜா நினைவு அறக்கட்டளையின் விருது (1996) ஆகியவை கமலாமூர்த்திக்கு வழங்கப்பட்டன. மேலும் "ஸங்கீதாமிருதவர்ஷினி", "ஹரிகதாவாணி", "ஸம்ப்ரதாய ரத்னா" போன்ற பல பட்டங்களைப் பெற்றவர் அவர். 2001இல் டில்லி சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது வழங்கி கெளரவித்தது.

ஸ்ரீநிவாசன், லக்ஷ்மி, புவனஸரஸ்வதி, சுந்தர பாஸ்கர், பாலசுப்பிரமணியன், சம்பத்குமார் என்ற மக்களைப் பெற்றுள்ளார் கமலாமூர்த்தி. மரபு பிறழாமலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் சிறப்பாக ஹரிகதை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார் கமலா மூர்த்தி. இவர் நூறாண்டுகளும்மும் மேல் வாழ வாழ்த்துகிறோம்.




Learner always : T.R. Kamala Murthy

TORCHBEARERS
Clad in a six yard cotton sari, M.S. style, she greets you with a Namaste and ‘Ram Ram.’ Every sentence she speaks is punctuated with the refrain that her successes are due to the grace of her Guru and God.
Quite agile at 78, she is into her 55th year of performing for All India Radio. Harikatha exponent T.R. Kamala Murthy traverses back to her moorings in typical style at her son’s apartment in K.V. Colony, West Mambalam.
She dwells permanently in Thanjavur and visits Chennai either to fulfil professional commitment or to spend time with her sons and grandchildren.
“As a child I was drawn more towards music than studies and hence I would never miss any music programme or harikatha that took place in the vicinity of Tiruvaiyaru. My maternal grandmother who was very fond of me wanted me to stay with her at Chidambaram. Little did I realise that this stay was going to play a vital role in my life,” begins Kamala Murthy.
“On the East Car Street (Keezha Veedhi) lived 75-year old Raja Bhagavathar who was a bachelor, well versed in music and harikatha. Realising his talent Natarajarathna Dikshitar made him stay at his house, thus helping the cause of music. Joining the neighbourhood children when they went to him and singing along with them became a routine. Impressed by my turning phrases during classes and my undaunted approach, he volunteered to teach me harikatha in particular. He followed the style of Tirupazhanam Panchapakesa Bhagavathar”.
Basic exercise
Raja Bhagavathar first taught her the basic music exercises and varnams in ragas such as Bhairavi, Sankarabharanam and Thodi. The first harikatha she learnt from him was ‘Vathsala Kalyanam’ with all the ingredients and Kamalamba (as she was called before her marriage) had the talent of repeating it within a few classes without any stutter. Satisfied, Bhagavathar arranged for her arangetram at Dikshitar’s house. She was eight years old then.
“My guru sat beside me and maintained the rhythm with ‘kundu talam’ and for every mistake I made the kundu would come hard on my toes. The pain made me even more steadfast in correcting my mistakes never to repeat them. I still remember the vaira oosi full skirt, red in colour with green border, that was presented to me by Dikshitar. Chidambaram Srirangchariar’s second son Kanteeravan played the mridangam for my arangetram. Harikatha exponent Embar Vijayaraghavachariar was his other son.
“During Navaratri that immediately followed I was invited to perform harikatha on ‘Vathsala Kalyanam’ by the Dikshitar families at their houses. People thronged to listen to my harikatha, although the story had been repeated several times.”
She says she never missed the ardhajama puja and the gnana kshira prasadam at the temple of Lord Nataraja and owes her success to the blessings of the Kalanathan (Lord Nataraja).
“It was almost a year in Chidambaram, when my father unable to bear my separation, took me back to Tiruvaiyaru. I was not given enough time even to inform my guru Raja Bhagavathar about it. Realising my absence after a few classes he told my grandmother that my talent should not be wasted and that I should continue learning harikatha from Tiruvaiyaru Annasamy Bhagavatar, famous vidwan. Raja Bhagavatar passed away within a few weeks.” Kamala Murthy pauses choked with emotion.
Lessons continued
Music lessons continued with Annasamy Bhagavathar who, basically, was a very shy person. His knowledge and delineation of ragas such as Thodi and Bhairavi was admired by doyens, who stayed in his house during festival periods. She learnt Valli Kalyanam, Garuda Garva Haranam, Rukmini Kalyanam and Sita Kalyanam from him.
When hardly sixteen years old, Kamalamba’s maiden performance at Tiruvaiyaru was at the Saint poet’s samadhi attended by none other than Bangalore Nagarathnamma who lived there.
There again, it was ‘Vathsala Kalyanam’ that drew appreciation from everyone. Bangalore Nagarthnamma showered special praise on the teen’s talent. And for young Kamala it was a blessing to learn kritis from Nagarathnamma, who stayed at the samadi during the day.
It was time to get married and the groom was Krishnamurthy who was serving the military. She then came to be known as Kamala Murthy. Thanjavur Gopala Bhavathar played mridangam for her regularly.
Vocal support is indispensable for harikatha and Kamala found an ideal partner in her younger sister.
Marriage would have applied brakes on Kamala’s career but for the influence of Thanjavur Rajam (guru of mridanga vidwan Thanjavur Upendran).
He arranged many programmes for her and the family did not object. Rajam, in fact, became a regular in her performances. Kanteeravan took over after his passing away.
Classes with Annasamy Bhagavathar helped Kamala improve her repertoire in Tamil, Telugu, Kannada, Marathi, Hindi, Urdu and Sanskrit. Bhagavathar always insisted on learning the language to understand the songs.
The support of her husband and mother in taking care of the family and children was something rare to find in those days, a boon according to Kamala Murthy.
Kamala Murthy reveres Banni Bai, Saraswathi Bai and Pudukottai Kanakambujam Amma all experts in harikatha field.
Kamala Murthy adores Venkatasubramania Sastrigal of Saraswathi Mahal library who was well versed in Sanskrit and Tamil.
Honing skills
Embar Vijayaraghavachariar showed a lot of interest in her development and helped her hone her skills.
“Harikatha came to us from the Marathis. Thanjavur Krishna Bhagavathar could be called the moola purusha of harikatha that was in vogue in Thanjavur. He was responsible for bringing it on stage with a bench to seat the accompanists.”
Kamala Murthy then goes on to explain various aspects of harikatha and recalls the services of Soolamangalam Vaidyanatha Bhagavathar and Mangudi Chidambara Bhagavathar for the development of the genre.
Even today she consults Swaminatha Athreya, Asthana Vidvan of Kanchi Mutt, living in Thanjavur, for clearing her doubts and the Saraswathi Mahal library for reference purposes.
She firmly believes that the urge to learn new things should never be given up. It is continuous search that keeps the mind agile and the makes the art thrive.

No comments:

Post a Comment

You can give your comments here