கி.பி. 300 முதல் 590 வரை களப்பிரர்
காலம்; சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம்.
கி.பி. 560 முதல் 580 வரை பல்லவன் சிம்மவிஷ்ணு
களப்பிரர்களைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை ஆளத் துவங்கிய காலம்.
கி.பி. 590 முதல் 630 வரை காஞ்சியில்
மகேந்திரவர்மனின் மகோன்னத ஆட்சி.
கி.பி. 610 திருநாவுக்கரசர் (அப்பர்)
மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து மீட்டு சைவனாக்கிய காலம்..
கி.பி. 628 சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி
காஞ்சிபுரத்தை முற்றுகையிட்ட காலம்.
கி.பி. 630 முதல் 668 வரை மாமல்லன் எனும்
நரசிம்ம பல்லவன் தொண்டைமண்டலத்தை காஞ்சியிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்த காலம்.
கி.பி. 642 நரசிம்மவர்ம பல்லவன் வாதாபியின்
மீது படையெடுத்து புலிகேசியைக் கொன்று மாபெரும் வெற்றி பெற்றது.
கி.பி. 670 முதல் 700 வரை மதுரையில்
பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் சிறப்பாக ஆண்ட காலம்.
கி.பி. 700 முதல் 728 வரை காஞ்சியில்
ஆண்ட பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியது.
கி.பி. 710 முதல் 730 வரை பாண்டியன்
கோச்சடையான் ரணதீரன் பாண்டிய சாம்ராஜ்யத்தை கொங்கு நாடு வரை விரிவடையச் செய்தது.
கி.பி. 731 பல்லவ சாம்ராஜ்யத்தில் உரிமைப்
போரில், அமைச்சர் குழு பல்லவமல்லன் எனும் இரண்டாம் நந்திவர்மனை அரியணையேற்றியது.
கி.பி. 731 முதல் 765 வரை பாண்டிய மன்னன்
மாறவர்மன் சாளுக்கிய மன்னன் 2ஆம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டு பல்லவன் நந்திவர்மனை
தாக்கியது.
கி.பி. 735 சாளுக்கியன் 2ஆம் விக்கிரமாதித்தன்
பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தது.
கி.பி. 760 பல்லவன் இரண்டாம் நந்திவர்மன்
கங்கைப்புரத்தின் மீது படையெடுத்தது.
கி.பி. 767 பாண்டிய படை பல்லவர்களை காவிரியின்
தென்கரையில் வெற்றி கண்டது.
கி.பி. 768 முதல் 815 வரை பாண்டிய நாட்டை
மதுரையில் பராந்தக நெடுஞ்செழியன் என்கிற வரகுண பாண்டியன் ஆட்சி புரிதல்.
கி.பி. 800 முதல் 830 வரை வரகுண பாண்டியன்
பல்லவ மன்னன் தண்டிவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை பாண்டிய நாட்டை விரிவுபடுத்தியது.
கி.பி. 840 பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்
இலங்கை மீது படையெடுத்து இலங்கையின் வடக்குப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
கி.பி. 846 முதல் 869 வரை பல்லவன் 3ஆம்
நந்திவர்மன் பாண்டியர்களின் மீது படையெடுத்து வந்து தெற்கே தெள்ளாறு எனுமிடத்தில் நடந்த
போரில் பாண்டியர்களைத் தோற்கடித்துவிட்டு தன் ஆளுமையை வைகை வரை விஸ்தரித்துக் கொண்டது.
கி.பி. 848 தஞ்சையை ஆண்டுவந்த முத்தரையர்களைத்
தோற்கடித்துவிட்டு பழையாறையில் இருந்த விஜயாலயன் சோழ நாட்டின் மன்னனாக முடிசூட்டிக்
கொண்டது.
கி.பி. 859 பாண்டியன் ஸ்ரீவல்லபன் பல்லவர்களைத்
தோற்கடித்தது.
கி.பி. 862 சிங்களப் படையினர் மதுரை
மீது படையெடுத்து வந்து பாண்டியன் ஸ்ரீமாறனைக் கொன்றது.
கி.பி. 903 சோழர் படை பல்லவன் அபராஜிதவர்மனைத்
தோற்கடித்தது.
கி.பி. 949 ராஷ்ட்ரகூட மன்னன் 3ஆம் கிருஷ்ணா
வடக்கே பல்லவ சாம்ராஜ்யம் முழுவதையும் வென்று ஆண்டுகொண்டிருந்த சோழ தேசத்துப் படைகளை
தக்கோலம் எனும் ஊரில் நடந்த போரில் வென்றது.
கி.பி. 985 கடைச்சோழர்கள் என வழங்கப்படும்
விஜயாலயனின் வம்சத்தில் உத்தம சோழனை அடுத்து ராஜராஜ சோழன் பதவிக்கு வந்தது.
கி.பி. 1010 தஞ்சை ‘ராஜராஜேச்சரம்’ என
வழங்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டி முடித்த ஆண்டு.
கி.பி.1012 தஞ்சையில் சோழ சாம்ராஜ்யத்தின்
மகாசக்ரவர்த்தியாக முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியுரிமை பெற்ற ஆண்டு.
கி.பி.1023 ராஜேந்திர சோழன் வடக்கே படையெடுத்துச்
சென்று கங்கைக் கரை பிரதேசங்களை வென்ற ஆண்டு.
கி.பி. 1925 இல் ராஜேந்திர சோழன் கடல்
கடந்து சென்று மாபெரும் கப்பற்படையுடன் ஸ்ரீவிஜயம் நாட்டை வென்று தூரக் கிழக்கில் சோழர்
கொடியை நாட்டியது.
கி.பி. 1041 ராஜேந்திர சோழன் இலங்கை
மீது படையெடுத்துச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது.
கி.பி. 1054 ராஜேந்திர சோழனின் குமாரன்
ராஜாதிராஜன் மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக நடந்த போரில் கொல்லப்படுகிறான்.
கி.பி. 1970 சோழ தேசத்தில் ராஜேந்திர
சோழனின் புத்திரர்கள் யுத்தத்தில் மாண்டுபோன நிலையில் தெலுங்கு சோழன் கீழைச் சாளுக்கிய
நாட்டிலிருந்து வந்த குலோத்துங்க சோழன் அரியணை ஏறுகிறான்.
கி.பி. 1118 சோழ தேசத்தின் அரசனாக விக்கிரம
சோழன் முடிசூடுதல்.
கி.பி. 1133 இரண்டாம் குலோத்துங்கன்
பதவிக்கு வருதல்.
கி.பி. 1146 இரண்டாம் ராஜராஜன் சோழ மன்னனாக
பதவிக்கு வருதல்.
கி.பி. 1163 இரண்டாம் ராஜாதிராஜன் அரியணை
யேறியது.
கி.பி. 1178 மூன்றாம் ராஜராஜன் பலமிழந்த
கடைசி காலத்து சோழமன்னனானது.
கி.பி. 1246 மூன்றாம் ராஜேந்திர சோழன்
சோழ வம்சத்தின் கடைசி மன்னனானது.
கி.பி. 1251 பாண்டிய நாட்டின் மதுரையில்
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் அரசனானது.
கி.பி. 1279 3ஆம் ராஜேந்திர சோழனின்
இறப்புக்குப் பின் சோழ வம்சம் முடிந்து போனது.
கி.பி. 1268 முதல் 1310 வரை மதுரையில்
குலசேகர பாண்டியன் ஆட்சி புரிதல்.
கி.பி. 1308 வடக்கேயிருந்து அலாவுதின்
கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுச் சண்டையில்
குலசேகர பாண்டியனின் மகன் வீரபாண்டியனுக்கு உதவுவதற்காக அவன் சகோதரன் சுந்தர பாண்டியனை
எதிர்த்துப் போரிடுவதற்காக வரும் வழியில் தேவகிரியை தோற்கடித்துவிட்டு தமிழகத்தினுள்
நுழைகிறான்.
கி.பி. 1310 பாண்டிய நாட்டில் நடந்த
உள்நாட்டுப் போரில் குலசேகர பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்றுவிட்டு
மன்னனாக முடிசூடுகிறான். அப்படி தந்தையைக் கொன்று பதவிக்கு வந்தவனை அவன் அண்ணன் வீரபாண்டியன்
மாலிக்காபூரின் உதவியோடு போரிட்டு வீரபாண்டியனைத் தோற்கடிக்கிறான்.
கி.பி. 1311 பாண்டியர்களின் தாயாதிச்
சண்டையில் தலையிட்டுப் போரிடவந்த மாலிக்காபூர் மதுரையையும் பாண்டிய நாட்டையும் சூறையாடி
கொள்ளையடிக்கிறான்.
கி.பி. 1327 முதல் 1370 வரை மதுரை சுல்தான்களின்
ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலம்.
கி.பி. 1370 வடக்கே விஜயநகர சாம்ராஜ்யம்
ஹரிஹரர் புக்கர் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது. புக்கரின் மகன் குமர கம்பண்ணா தமிழகத்தின்
மீது படையெடுத்து வென்றது.
கி.பி. 1370 முதல் 1500 வரை மதுரை, செஞ்சி
ஆகிய பிரதேசங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளான நாயக்க வம்சத்து அரசர்கள்
ஆளுகைக்கு உட்பட்ட காலம்.
கி.பி. 1518 ஐரோப்பியாவிலிருந்து வர்த்தகம்
செய்ய போர்த்துகீசியர்கள் கப்பல்களில் வந்து கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களில் வந்திறங்கிய
காலம்.
கி.பி. 1532 முதல் 1580 வரை விஜயநகர
சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரை ஆண்ட காலம்.
கி.பி. 1600 முதல் 1645 தஞ்சை நாயக்க
வம்சத்தின் நட்சத்திரமாக விளங்கிய ரகுநாத நாயக்கர் தஞ்சையை ஆண்டு காலம்.
கி.பி. 1609 தென்னிந்தியாவில் தமிழ்
மண்ணில் டச்சுக்காரர்கள் காலடியெடுத்து வைத்த காலம்.
கிபி. 1623 முதல் 1659 வரை மதுரையில்
திருமலை நாயக்கர் ஆண்ட காலம்.
கி.பி. 1639 இங்கிலாந்தில் 1600இல் தொடங்கிய
கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு வந்து, வந்த இடத்தில் சென்னப்பட்டணத்தை
விலைக்கு வாங்கி அங்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய காலம்.
கி.பி. 1652 தஞ்சை நாயக்க மன்னர்களுக்கும்
மதுரை நாயக்க மன்னர்களுக்குமிடையே நடந்த தகறாறில் ஒரு பிரிவினர் பிஜப்பூர் சுல்தான்
அலி அடில்ஷாவிடம் சென்று உதவி கேட்கிறார்.
கி.பி. 1656 மதுரை திருமலை நாயக்கருக்கு
எதிராக மைசூர் படைகள் படையெடுத்து வந்து சேலம் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்கிறது.
கி.பி. 1676 பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவின்
கட்டளைப்படி அவருடைய தளபதியும் சத்ரபதி சிவாஜி மகராஜின் தம்பியுமான ஏகோஜி என்கிற வெங்காஜியை
படையுடன் தஞ்சைக்கு அனுப்ப, அவர் தஞ்சையை வென்று அரசராகிறார்.
கி.பி. 1692 வடக்கே டெல்லி முகலாய சக்ரவர்த்தியின்
பிரதிநிதியாக ஆர்க்காடு நவாபாக சுல்பிகார் அலி கான் நியமிக்கப்படுகிறார்.
கி.பி. 1746 பிரான்ஸ் நாட்டிலிருந்து
வர்த்தகம் புரிய இந்தியா வந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி போரிட்டு சென்னை ஜார்ஜ்
கோட்டையை ஆக்கிரமித்துக் கொள்வது.
கி.பி. 1749 ஐரோப்பாவில் நடந்த யுத்தத்தை
அடுத்து இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஆஸ்திரியா நாட்டு வாரிசுரிமைப் போரின் முடிவில்
ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி சென்னையில் ஜார்ஜ் கோட்டையை பிரான்சிடம் இழந்த இங்கிலாந்து
மீண்டும் அந்த கோட்டையின் உரிமையைத் திரும்பப் பெற்றது.
கி.பி. 1751 இங்கிலாந்து கிழக்கிந்திய
கம்பெனியின் தளபதியாக இருந்த ராபர்ட் கிளைவ் ஆர்க்காட்டின் மீது படையெடுத்து வேலூரைப்
பிடித்துக் கொள்கிறார்.
கி.பி. 1756 ஐரோப்பாவிலிருந்து இங்கு
வர்த்தகம் புரிய வந்த இரு பிரிவினரான ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் தமக்குள்
ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு முகமது அலி வாலாஜா என்பவரை ஆர்க்காடு நவாபாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த ஒப்பந்தம் முதலாம் கர்நாட்டிக் ஒப்பந்தம் என்று பெயர்.
கி.பி. 1759 பிரெஞ்சுப் படைகள் தாமஸ்
ஆர்தர், காம்டி லாலி என்பார் தலைமையில் படையெடுத்துச் சென்று சென்னை கோட்டையைத் தாக்குகிறார்கள்.
கி.பி. 1760 இதனையடுத்து ஆங்கிலேயர்
படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் வந்தவாசியில் ஒரு யுத்தம் நடந்தது.
கி.பி. 1767 மைசூரின் உடையார் வம்சத்து
அரசர்களிடம் பணிபுரிந்து தளபதியாக இருந்து பின்னர் அவர்களை ஒதுக்கிவிட்டு மைசூரை ஆளத்
துவங்கிய ஹைதர் அலி என்பார் மைசூர் சுல்தான் என்ற முறையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக
படையெடுத்து வந்து செங்கம் எனுமிடத்தில் ஒரு போரில் ஈடுபட்டார்.
கி.பி. 1773 இங்கிலாந்தில் அந்த நாட்டின்
அரசு ஒரு சட்டத்தின் மூலம் சென்னையின் நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசு மேற்கொள்வது என்று
முடிவு செய்தது.
கி.பி. 1777 முதல் 1832 தஞ்சையில் துளஜேந்திர
மகாராஜாவின் மறைவுக்குப் பிறகு வாரிசு இல்லாமல் போய், பின்னர் சதாராவிலிருந்து ஒரு
ராஜ குடும்பத்துச் சிறுவனைக் கொண்டு வந்து சுவீகாரம் எடுத்து அவரைப் படிக்க வைத்து
தஞ்சை அரச பீடத்தில் உட்காரவைக்கப் படுகிறார். அவர்தான் இரண்டாம் சரபோஜி மன்னர். இவருக்குப்
போட்டியாக துளஜாவின் மகன் என்று அமரசிம்மன் என்பாரும் போட்டியில் இருந்தார்.
கி.பி. 1799 சரபோஜி ஆட்சிக்கு வந்தபோது
சிறுவன் என்பதால் பிரிட்டிஷ் தஞ்சை ராஜ்யத்தின் நிர்வாகத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டு
அரசருக்கு தலைநகரை மட்டும் நிர்வாகம் செய்யும் உரிமையைக் கொடுத்து, கலை இலக்கியங்களில்
ஈடுபட வசதி செய்து கொடுத்துவிட்டது.
கி.பி. 1800 முதல் 1805. இங்கிலாந்தின்
கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் தெற்கே பாளையக்காரர்களுக்கும் யுத்தம் நடந்த காலம்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ஊமைத்துரை போன்ற பல பாளையக் காரர்கள் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1806 வேலூர் கோட்டைக்குள் ஒரு
கலவரம் நடந்தது. அதில் கவர்னர் பென்டிக் என்பவருக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் கலகம்
செய்தனர். அதில் 114 வெள்ளைக்கார அதிகாரிகளும் 19 இந்திய சிப்பாய்களும் மாண்டு போயினர்.
திப்பு சுல்தானின் மக்கள் அந்த சிறையில் அப்போது இருந்தனர். பின்னர் அவர்கள் கல்கத்தாவுக்குக்
கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.
கி.பி. 1855 தஞ்சை மராத்திய மன்னன் இரண்டாம்
சிவாஜியின் மரணத்துக்குப் பின் தஞ்சையை ஆங்கில அரசே மேற்கொண்டது.
கி.பி. 1857 வடக்கே சிப்பாய் கலவரம்
எனும் முதல் சுதந்திரப் போர். ஒரு சில ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அரசே இந்தியாவின்
நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து மேற்கொண்டது. விக்டோரியா மகாராணி ஒரு
பிரகடனம் மூலம் இந்த முடிவை அறிவிக்கிறார்.
கி.பி. 1885 இந்தியர்களை பிரதிநிதித்துவப்
படுத்த இந்திய தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பினை ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பார் தொடங்கினார்.
கி.பி. 1892 இங்கிலாந்து பார்லிமெண்டில்
இந்தியன் கவுன்சில்ச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவை நிர்வகிப்பது
குறித்து இங்கிலாந்து முடிவெடுக்கும்.
கி.பி. 1909 இந்தியாவில் பிரிட்டிஷ்
சிறிது சிறிதாக தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி முழுவதுமாக இந்தியாவை ஆளத் தொடங்கிய
நேரத்தில், இந்தியர்கள் தங்களுக்கும் சில உரிமைகள் வேண்டி போராடத் துவங்க, அவர்களுக்கு
எத்தகைய பங்களிப்பு தரலாம் என்பதை முடிவு செய்ய மிண்டோ மார்லி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டது.
கி.பி. 1909 சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சில்
எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
கி.பி. 1919 பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்
எனுமிடத்தில் பிரிட்டிஷ் ஜெனரல் டயர் என்பான் செய்த கொடுமையால் பல்லாயிரக் கணக்கான
இந்தியர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
கி.பி. 1915 தென்னாப்பிரிக்காவில் போராடிக்
கொண்டிருந்த மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி இந்தியா திரும்பி இந்திய அரசியலில் ஈடுபட
விரும்பினார்.
கி.பி. 1920 மகாத்மா காந்தி பிரிட்டிஷுக்கு
எதிராக அமைதி சத்தியாக்கிரக போராட்டங்களைத் துவங்குகிறார்.
கி.பி. 1921 முதன் முதலில் சென்னை மாகாணத்தில்
ஒரு சில பிரிவினர் மட்டும் பங்குபெறும் தேர்தலொன்று நடந்தது. அதில் ஜஸ்டிஸ் கட்சி வென்று
ஆட்சி அமைத்தது.
கி.பி. 1927 அகில இந்திய காங்கிரஸ் பரிபுரண
சுதந்திரம் எனும் தீர்மானம் நிறைவேற்றம்.
கி.பி. 1928 இந்தியர்களுக்கு சலுகைகள்
வழங்க சிபாரிசு செய்ய சைமன் கமிஷன் இந்தியா வந்தது. அதை எதிர்த்து இந்தியர்கள் பலத்த
போராட்டம்.
கி.பி. 1930 மகாத்மா காந்தி தலைமையில்
உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. தண்டியெனும் ஊர் வாரை நடந்தே சென்று காந்தியடிகள் உப்பு
எடுத்து கைதானார். தெற்கே ராஜாஜி திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடந்து சென்று அகத்தியம்பள்ளியில்
உப்பெடுத்து கைதாகி சிறை சென்றார்.
கி.பி. 1937 மாகாண சட்டமன்ற தேர்தலில்
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வென்று சி.ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி தலைமையில்
அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.
கி.பி. 1938 தமிழ்நாட்டில் ஈ.வே.ராமசாமி
நாயக்கர் காங்கிரசிலிருந்து விலகி திராவிடர் இயக்கமொன்ற தொடங்கினார்.
கி.பி. 1939 இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது.
அரசியலில் ஒரு மாற்றம் தெரியலாயிற்று.
கி.பி. 1942 பம்பாயில் கூடிய காங்கிரஸ்
‘வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேற்ற தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறை சென்றனர்.
மக்கள் கலவரம் செய்தனர். எங்கும் நிர்வாகம் நிலைகுலைந்து போயிற்று. ஆங்கிலேயர் இனியும்
இந்த நாட்டில் காலந்தள்ள இயலாது என்பதை உணர்ந்தனர்.
கி.பி. 1944 ஈ.வே.ரா., அண்ணாதுரை ஆகியோர்
திராவிடர் கழகம் தொடங்கினர்.
கி.பி. 1945 இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு
வந்ததும் இந்திய சுதந்திரம் பற்றி வேகம் எடுத்தது.
கி.பி. 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா பாகிஸ்தான்
என்று இரு நாடுகளாகப் பிரிந்து சுதந்திரம் பெற்றது.
இதன் பின்னர் நடந்ததனைத்தையும் நாமறிவோம்.
1 comment:
இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/
Post a Comment