பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, February 3, 2013

ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு


திருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு

திருவையாற்றிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாறப்பர் ஆலய குடமுழுக்காட்டு விழா நேற்று 13-2-2013 ஞாயிறு அன்று யாகசாலை பூசைகளுடன் தொடங்கியது. காவிரியிலிருந்து தீர்த்தக் குடங்களை எடுத்துக் கொண்டு சிவாச்சாரியார்கள் முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், இந்து அற நிலைய செயலாளர் டாக்டர் ராஜாராம் நூற்றுக்கணக்கான பக்தகோடிகள் புடைசூழ நான்கு வீதிகளின் வழியாக கிராமியக் கலைஞர்களின் ஆடல் பாடல்களுடன் ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர்.

மாலையில் தென் கைலாயம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சொற்பொழிவுகள் இடம்பெற்றன. இரவு சின்னமனூர் திருமதி சுஜாதா ரமேஷ் அவர்களின் மாணவியரின் அற்புதமான பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.




3 comments:

kmr.krishnan said...

change the date as 3rd from 13th,please.
Thank you for the information.

kmr.krishnan said...

change the date as 3rd from 13th,please.
Thank you for the information.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (23.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். இன்றைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!