பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, September 15, 2016

குடுமியான்மலை

                                          

குடுமியான்மலைபுதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு,இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில்பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டுஇசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும்தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது.
சென்றடையும் வழி
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு. பேருந்து எண் : எண் 5 , 28 . என்ற எண் கொண்ட பேருந்துகள் சுமார் 45 முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும், வழியாக கடந்துசெல்லும் ஊர்கள், திருவப்பூர் , பெருமாநாடு , குமரமலை விளக்கு, புல்வயல் , அண்ணா பண்ணை, வயலோகம், விசலூர் , குடுமியான்லை.        
வரலாறு
இசைக் கல்வெட்டுகள்

தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர்என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.

சங்கநூல் குறிப்பு
குடைவரைக் கோயில்

'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி.

குடைவரைக் கோயில்
குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலும், அதன் பின்புறம் உள்ளகுடைவரையும், அதன் அருகிலுள்ள இசைக்கல்வெட்டும் மிகச்சிறப்பு வாய்ந்தவை. குடுமிநாதர் கோவில் சிற்பங்கள் மிகவும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. மாலிக் காபூரின் படையெடுப்பில் சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன.

குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டத்தில், குளத்தூர் வட்டத்திலே உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை வழியாக திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். கிழக்கே 10 கி.மீ தொலைவில் ஓவியக்கலைக்கு புகழ் வாய்ந்தசித்தன்னவாசலும், மேற்கே 25 கி.மீ தொல்வில் கலை மிக்க கொடும்பாளூர் உள்ளது. இக் குடுமியான்மலை தன் வரலாற்றில் வேறு பெயர்களும் கொண்டு இருந்தன. அவற்றுல் திருநிலக்குன்றம் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) , திருநலக் குன்றம் (கி.பி. 8ஆம் நூ) , சிங்கா நல்லூர் (இரண்டாம் இராசராசன் காலம், 12 ஆம் நூற்றாண்டு) என்பன சில.

குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் அறிஞர்.திருமெய்யம், மலையடிபட்டி என்னும் ஊர்களிலும், இக்குடுமியான்மலையில் உள்ளதைப்போல் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடுமியான் மலையில் உள்ள இசைக்கல்வெட்டில் உள்ள இசை நுணக்கங்கள் முற்றுமாய் ஆய்வு செய்யப்படவில்லை. இவை தமிழிசையே என்பார் யாழ்நூல் என்னும் இசை நூல் எழுதிய விபுலானந்த அடிகள் . கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுத்ததாகக் கருதப்படும் பரத முனிவரின் இசை நூலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சங்கீத ரத்தினாகரத்திற்கும்இடைப்பட்ட காலத்திய இசைச் செய்தி என்பதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கல்வெட்டுகள்
இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார்
இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில்சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

மறு சீரமைப்புப் பணிகள்
சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம்பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டைச் சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகர்களின் அமைப்பு) ஊர்களும், படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டுக் கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவி
'உமையாள்வி நாச்சி' என்றபெயருடைய தாசிப் பெண்ணும், இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்குக் கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள்தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டுக் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன.                            
       
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை யில் உள்ள மலைப் பாறையில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக் கால ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓவியம், பழமை யான சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்று சிறப்புகளைக் கொண்டுள்ள மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இந்த மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலையில் பெருங்கற்காலம் அல்லது இரும்புக் கால பண்பாட்டுத் தடயங்கள், கி.பி. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, கல்படுக்கைத் தளங்கள், கி.பி. 9-ம் நூற்றாண்டு பாண்டியர் குடவரைக் கோயில், கர்நாடக சங்கீத கல்வெட்டு, சோழர், பாண்டியர், விஜயநகர நாயக்கர், தொண்டமான் மன்னர்கள் காலத்து கோயில்கள், அழகான சிற்பங்கள், சுமார் 200 கல்வெட்டுக்கள் என வரலாற்றுச் சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன.

குடுமியான்மலை கோயிலுக்கு பின்புறம் பரம்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுமார் 30 அடி உயரமுள்ள குன்று முழுவதும் சுமார் 20 இடங்களில் பலவிதமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்ட அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநரும் புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவருமான டாக்டர் ஜெ. ராஜாமுகமது, செயலர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் கூறியது:
சிவப்பு நிறத்தில் மனிதன் அம்புடன் வேட்டைக்கு செல்லுதல், கருப்பு நிறத்தில் வரையப்பட்ட மனிதன் உருவம், பிராணியின் உருவம், மரம், செடி, கொடிகள் போன்று தோற்றமளிப்பவை இந்த பாறைகளில் வரையப்பட்டுள்ளன.

ஓவியங்கள் எளிதில் அழிந்து விடாமல் இருக்க இயற்கையில் கிடைக்கும் சிவப்புக் காவிக்கல், மஞ்சள் காவிக்கல், அடுப்புக்கரி ஆகியவற்றைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. செங்குத்தாக அமைந்துள்ள ஓவியங்கள் காணப்படும் பாறை பல ஆயிரம் ஆண்டுகாலமாக மழை, வெயில், காற்று போன்ற இயற்கைத் தாக்கங்களுக்கு உட்பட்டதால் இதில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகளாக ஓவியங்கள் நிலைத்து நிற்பதற்கு, இயற்கை மூலிகைகளால் வரையப்பட்டதே காரணமாகும்.இந்த வடிவங்களைக் கொண்டு 4000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நாகரிக வளர்ச்சி, கலை ஆர்வம், பிற இடங்களுடனான தொடர்புகளை அறியமுடியும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகெங்கும் காணப்படும் இதுபோன்ற ஓவியங்கள் தமிழ்நாட்டில் சுமார் 500 இடங்களில் காணப்படுகின்றன. அதில் விழுப்புரம், தருமபுரி, வேலூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குடுமியான்மலையில் காணப்படும் பாறை ஓவியங்கள் விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடி, திண்டுக்கல் சிறுமலை ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களை ஒத்துள்ளன. இதுகுறித்து மேலாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது வரலாற்று பண்பாட்டு சின்னமாக விளங்கும் இந்த ஓவியங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்க இவ்வூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக குடுமியான்மலை அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் மூலவர் சிகாநாதசாமி என்றும், அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டுள்ளார். கிழக்குப்பகுதியில் இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இல்லாத, கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டுகளும், மேற்கு பகுதியில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் கலையழகுமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கார், வேனில் செல்லலாம். திறக்கும் நேரம்: காலை 7 - மாலை 4 மணி வரை.

No comments: