திருவையாறு அருள்மிகு தர்மசம்வர்த்தனி உடனாய ஐயாறப்பர் ஆலயம், திருவையாறு.
மார்ச் திங்கள் 9,10,11
இறைவனுடைய திருவருளோடும், திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுர ஆதீனம் மகாசன்னிதானம்
அவர்களுடைய அருளாசியோடும், தவத்திரு குமாரசுவாமி தம்பிரான் ஒத்துழைப்போடும்
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா
வரும் மார்ச் திங்கள் 9,10,11 ஆகிய தேதிகளில் ஐயாறப்பர் ஆலயத்தின்
திருவோலக்க மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு இறைவனுக்கு நாட்டிய
அஞ்சலி செலுத்தவிருக்கிறார்கள்.
அன்பர்களும், இசை நாட்டியப் பிரியர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாய்
அன்போடு அழைக்கிறோம்.
ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழாக் குழுவினர்.


No comments:
Post a Comment
You can give your comments here