பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 13, 2013

சுதந்திரம்

எத்தனை யெத்தனை தியாகிகள்; எத்தனை யெத்தனை போராட்டங்கள்; அவை அத்தனையும் பெற்றுத் தந்த நமது இந்திய சுதந்திரத்தை மீண்டும் அன்னிய சக்திகளிடம் அடகு வைக்க அனுமதிக்கக்கூடாது. சுதேசி எனும் சொல்லின் பொருள் நமக்கு மறந்து விடவில்லை. அன்னிய துணிகளை ஒதுக்கிவிட்டு கையால் நூற்று நெய்த கதர் துணிகளை அணிந்தல்லவா மகாத்மா சுதந்திரப் போரை நடத்தினார். அவரது எண்ணங்களை அழிக்கும் வகையில் நாம் நடந்திடலாமா? அன்று கிடைத்தது அரசியல் சுதந்திரம். இன்று நமக்குத் தேவை அன்னிய மோகத்திலிருந்து மற்றுமொரு சுதந்திரம். வெற்றி பெறுவோம். ஜெய் ஹிந்த்!






1 comment:

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஐயா!..சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம் - என்பதை இந்த மக்கள் உணராதவரை - சுதந்திரம் பொருளற்றது தான்!..