பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 17, 2013

மீண்டும் மற்றொரு சிவாலயத்திற்கு ஆபத்து :



மீண்டும் மற்றொரு சிவாலயத்திற்கு ஆபத்து :

வெண்பாக்கம், புறவார்பனங்காட்டூர் (கடும் போராட்டதிற்குப் பிறகு ஈசன் அருளால் புறவார்பனங்காட்டூர் காப்பாற்றப்பட்டுவிட்டது) வரிசையில் மீண்டும் ஒரு திருக்கோயில் - 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இராஜேந்திர சோழன் திருப்பணி திருக்கோயிலான - "மானம்பாடி" (சோழபுரம் - திருப்பனந்தாள் சாலை; திருவிடைமருதூர் வட்டம்) அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி திருக்கோயில் மதிற்சுவரை இடித்து NH-45c தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய இந்திய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு திருக்கோயில் மதிற்சுவரை இடிக்க முயல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சாலைகள் அமைப்பதற்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கும்போது இந்து மக்களின் மனம் வேதனைப்படுமாறு நெடுஞ்சாலைத்துறையானது அதே செயலை மீண்டும் மீண்டும் செய்து இந்து மக்களின் மனங்களில் வெறுப்பைக் கொட்டுவதாக நடந்துகொள்வது மிகவும் வருத்தத்திற்குரிய மற்றும் கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளது.
புறவார் பனங்காட்டூர் திருக்கோயில் விவகாரம் ஓய்ந்து ஓராண்டுக்குள் அதே பிரச்சினை வேறு ரூபத்தில் முளைத்து இருப்பது மிகவும் வேதனையாகவே உள்ளது. இந்து கோயில்களை இடித்தல், மாற்றி அமைத்தல் அல்லது வளர்ச்சிப்பணி என்ற பெயரில் திருக்கோயில்களுக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற, எந்த இந்துக்களும் விரும்பாத செயல்கள் இந்து மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
புராதனத்திற்கு எந்த வகையிலும் சிறிதும் ஆபத்து நேர்ந்துவிடாமல் தமிழ அரசின் இந்து சமய அறநிலைத் துறை பாதுகாக்கும் என்று நம்புகிறோம். இந்துக்களின் அரண்களாகிய ஆதீனங்களும், மடங்களும் இப்பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

1 comment:

துரை செல்வராஜூ said...

Facebook-லும் இது குறித்து தகவல் வெளியான போது, மானம்பாடி ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயிலில் இறையன்பர்கள் கூடி, நிலைமையினை உத்தேசித்து கூட்டு வழிபாடு செய்திடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன்.. எல்லாவற்றுக்கும் இறையருளே பெருந்துணை..