பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 31, 2012

வீரத் தலைவர் பால கங்காதர திலகர்

பால கங்காதர திலகர்

மகாகவி பாரதியும், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோருடைய சுதந்திரக் கனலை எழுப்பிவிட்ட வீரத் தலைவர் பால கங்காதர திலகர் நினைவு தினம் இன்று. ஆகஸ்ட் முதல் தேதி. 1920ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும் மக்கள் மனதிலிருந்து மறையாத மாபெரும் தலைவர். நமது வணக்கங்களை அந்தத் தியாகப் பெருமகனாருக்கு அர்ப்பணம் செய்வோம். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு வலைத்தளத்திலிருந்து கொடுத்திருக்கிறேன்.

Bal Gangadhar Tilak Biography


Bal Gangadhar Tilak is considered as Father of Indian National Movement. Bal Gangadhar Tilak was a multifaceted personality. He was a social reformer, freedom fighter, national leader, and a scholar of Indian history, sanskrit, hinduism, mathematics and astronomy. Bal Gangadhar Tilak was popularly called as Lokmanya (Beloved of the people). During freedom struggle, his slogan “Swaraj is my birthright and I shall have it” inspired millions of Indians.

Bal Gangadhar Tilak
Born: July 23, 1856
Died: August 1, 1920
Achievements: Considered as Father of Indian
National Movement; Founded “Deccan Education Society” to impart quality education to India's youth; was a member of the Municipal Council of Pune, Bombay Legislature, and an elected 'Fellow' of the Bombay University; formed Home Rule League in 1916 to attain the goal of Swaraj.

Bal Gangadhar Tilak was born on July 23, 1856 in Ratnagiri, Maharashtra. He was a Chitpavan Brahmin by caste. His father Gangadhar Ramachandra Tilak was a Sanskrit scholar and a famous teacher. Tilak was a brilliant student and he was very good in mathematics. Since childhood Tilak had an intolerant attitude towards injustice and he was truthful and straightforward in nature. He was among India's first generation of youth to receive a modern, college education.

When Tilak was ten his father was transferred to Pune from Ratnagiri. This brought sea change in Tilak’s life. He joined the Anglo-Vernacular School in Pune and got education from some of the well known teachers. Soon after coming to Pune Tilak lost his mother and by the time he was sixteen he lost his father too. While Tilak was studying in Matriculation he was married to a 10-year-old girl called Satyabhama. After passing the Matriculation Examination Tilak joined the Deccan College. In 1877, Bal Gangadhar Tilak got his B.A. degree with a first class in mathematics. He continued his studies and got the LL.B. degree too.

After graduation, Tilak began teaching mathematics in a private school in Pune and later became a journalist. He became a strong critic of the Western education system, feeling it demeaning to Indian students and disrespectful to India's heritage. He came to the conclusion that good citizens can be moulded only through good education. He believed that every Indian had to be taught about Indian culture and national ideals. Along with his classmate Agarkar and great social reformer Vishnushastry Chiplunkar, Bal Gangadhar Tilak founded “Deccan Education Society” to impart quality education to India's youth.

The very next year after the Deccan Education Society was founded, Tilak started two weeklies, 'Kesari' and 'Mahratta'. 'Kesari' was Marathi weekly while 'Mahratta' was English weekly. Soon both the newspapers became very popular. In his newspapers, Tilak highlighted the plight of Indians. He gave a vivid picture of the people's sufferings and of actual happenings. Tilak called upon every Indian to fight for his right. Bal Gangadhar Tilak used fiery language to arouse the sleeping Indians.

Bal Gangadhar Tilak joined the Indian National Congress in 1890. He was a member of the Municipal Council of Pune, Bombay Legislature, and an elected 'Fellow' of the Bombay University. Tilak was a great social reformer. He issued a call for the banning of child marriage and welcomed widow remarriage. Through the celebrations of Ganapati Festival and the birthday of the Shivaji he organized people.

In 1897, Bal Gangadhar Tilak was charged with writing articles instigating people to rise against the government and to break the laws and disturb the peace. He was sentenced to rigorous imprisonment for one and a half year. Tilak was released in 1898. After his release, Tilak launched Swadeshi Movement. Through newspapers and lectures, Tilak spread the message to each and every village in Maharashtra. A big 'Swadeshi Market' was opened in front of Tilak's house. Meanwhile, Congress was split into two camps-Moderates and Extremists. Extremists led by Bal Gangadhar Tilak opposed the moderate faction led by Gopal Krishna. Extremists were in the favour of self rule while the moderates thought that time is not yet ripe for such an eventuality. This rift finally led to a split in the Congress.

Tilak was arrested on the charges of sedition in 1906. After the trial, Tilak was sentenced to six years of imprisonment in Mandalay (Burma). Tilak spent his time in prison by reading and writing. He wrote the book 'Gita-Rahasya' while he was in prison. Tilak was released on June 8, 1914. After his release, Bal Gangadhar Tilak tried to bring the two factions of Congress together. But his efforts did not bear much fruit. In 1916, Tilak decided to build a separate organization called the 'Home Rule League'. Its goal was swaraj. Tilak went from village to village, and explained the aim of his league to the farmers and won their hearts. He traveled constantly in order to organize the people. While fighting for people’s cause Bal Gangadhar Tilak died on August 1, 1920.

திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S.

Second from left with Gandhi Cap is Sri K.Lakshmikanthan Bharathi  during Salt Satyagraha March re enacted in Vedaranyam. Person wearing brown khadi jibba is Mr.Vedarathinam, grandson of  Sardar Vedarathinam Pillai, who was the real Hero of 1930 Salt Satyagraha held under Rajaji.




தன்னைப் பற்றி திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. எழுதியுள்ள கட்டுரை.
"தினமணி" சுதந்திர தின பொன்விழா மலரில் வெளிவந்தது.

மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் லட்சுமிகாந்தன் பாரதி. தாம் கைது செய்யப்பட்டு கை விலங்கிடப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே, பிற்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, சாதனை படைத்தவர். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்போது திருச்செங்கோட்டில் இருக்கும் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' தலைவராக இருந்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு அரிய பல சேவைகளை செய்து வருகிறார். இவர் போன்ற தேசத் தொண்டர்களுக்கு வயதோ, உடல்நிலையோ ஒரு பொருட்டல்ல. தந்தை, தாய், இவரது சகோதரி, இவர் என்று குடும்பமே நாட்டுச் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற தியாக வரலாறு இவருடையது. 

தந்தை திரு எல்.கிருஷ்ணசாமி பாரதியைப் போலவே சுறுசுறுப்பாகப் பேசுபவராகவும், தேசபக்தியில் புடம் போட்ட தங்கமாகவும் காட்சி தரும் திரு லட்சுமிகாந்தன் பாரதி எழுதிய கட்டுரை இதோ:

நாடு விடுதலை அடைந்த 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது விடுதலை இயக்கமும் 1942ல் நாடே கொதித்து எழுந்ததும் அப்பேரியக்கத்தில் 16 வயது மாணவனாக இருந்த நான் கலந்து கொண்ட நினைவுகளும் என் மனக்கண் முன் தோன்றுகின்றன.

1942 ஆகஸ்டு 9ல் மகாத்மா காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது, நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாண்டு மாணவன். 16 வயது பூர்த்தியாகாத இளம் பருவம்.

மாணவர்களாகிய நாங்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளித்தோம். அன்று மாலை, காவல் துறையினரின் படுபயங்கரமான அடக்குமுறைகளையும் மீறி, நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உணர்ச்சியே வடிவாகக் கல்லூரியிலிருந்து புறப்பட்டோம்.

எங்கும் தடியடி - துப்பாக்கிப் பிரயோகம், ஆனால் இவைகள் எல்லாம் எங்களுக்கு வெகு அற்பமாகத் தோன்றின. அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், அந்த இரவு நாங்கள் செயல்பட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

இதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது, பெண் தியாகிகளை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரியின் மீது திராவகம் ஊற்றியது, இப்படி அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

காவல் துறையின் தடியடிப் பிரயோகத்தில் எனக்கு அடுத்து நின்ற மாணவரின் மண்டை பிளந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் நான் அவரைத் தாங்கிப் பிடித்தேன். அப்படி அடிபட்ட அந்த மாணவர் கோவிந்தராஜந்தான் பிற்காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினரானார்.

என் சகோதரி மகாலட்சுமி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறை சென்ற செய்தி கிடைத்த மறுநாள், நான் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானேன். 6 மாதச் சிறை தண்டனை பெற்று அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு மாபெரும் தலைவர்களுடன் 6 மாதம் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. 

நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, பல்கலைக் கழகத்தில் நான் தொடர்ந்து படிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்து, பல்கலைக் கழகத்திலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினார்கள். இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ராஜாஜிக்கு எனது தந்தை கிருஷ்ணசாமி பாரதி கடிதம் எழுதினார்.

உடனே, பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ஏ.எல்.முதலியாருக்கு ராஜாஜி கடிதம் எழுதினார். இளம் வயது மாணவனின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் வகையில் இப்படிச் செய்தது சரியல்ல என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நான் சிறையிலிருந்து வந்ததும் படிப்பைத் தொடர அனுமதி கிடைத்தது.

எந்த மதுரையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேனோ, அதே மதுரையின் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பிற்காலத்தில் நான் பதவி ஏற்றேன். எனது கைமாறு கருதாத தேசபக்திக்குக் கிடைத்த பரிசாக அதை நான் எண்ணினேன்.

அதுமட்டும் அல்ல. 1967ல் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா சிலை திறப்பு விழா நடைபெற்றது. அச்சிலையை ஏ.எல்.முதலியார் திறந்து வைத்தார். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நான் விழாவுக்குத் தலைமை வகித்தேன்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் நான் படிப்பைத் தொடர அனுமதித்தபோது எனது பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படி ஏ.எல்.முதலியார் அறிவுரை கூறியிருந்தார். அதை அவ்விழாவில் நான் அவரிடம் நினைவு படுத்தினேன். அவர் என்னத் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.

இந்தியா ஒரு புண்ணிய பூமி. அதே நேரத்தில் இந்தியாவின் புண்ணிய பூமி அந்தமான் தீவுகள். ஆம்! விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் அடைக்கப்பட்ட கொடுஞ் சிறை அந்தமானில்தான் உள்ளது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் அங்கேயே இறந்திருக்கிறார்கள். அங்கு அடைக்கப்பட்டவர்களில் பலருக்கு அடுத்த சிறைக் கொட்டடிகளில் யார் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. அவ்விதம் மற்ற கைதிகளைக் காணமுடியாதபடி அச்சிறை நட்சத்திர வடிவில் கட்டப்பட்டிருக்கும். கடுமையான தண்டனைகள், சித்திரவதைகளைச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அங்கு அனுபவித்தனர்.

அத்தகைய அந்தமான் சிறைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆண்டுதோறும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அச்சிறையில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனுபவித்த கொடுமைகளை விளக்க வேண்டும்.

இதுவரை இப்படிச் செய்து வந்திருந்தாலே, தற்போது நாட்டில் நிலவும் பிரிவினை வாதம், தீவிரவாதம், சாதி, மத மோதல்கள் போன்றவை தலை தூக்கியிருக்காது. தேசபக்தி இளைய சமுதாயத்தினரிடையே தழைத்து ஓங்கி இருக்கும்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.

(திரு கி.லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள் இப்போது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவராக இருந்து கொண்டு சுற்றுப்புற கிராமங்களில் சர்வோதய தொண்டு புரிந்து வருகிறார். குடிநீர் பிரச்சினை, மதுவிலக்கு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த உண்மையான காந்தியவாதியை நினைத்து தமிழர்கள் பெருமைப் படவேண்டும். தியாகிகள் பரம்பரையில் வந்த இந்த தியாகியும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இவரது தாயார் மகாத்மா காந்தியின் அஸ்தியை இராமேஸ்வரம் கடலில் கரைக்கும் பேறு பெற்றவர்கள்.)

Sunday, July 29, 2012

மழலைகளுக்கு இனிய பாடல்கள்.

மழலைகளுக்கு இனிய பாடல்கள்.

தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அந்தச் சிறார்களுக்கு LKG, UKG போன்ற நுழைவு வகுப்புகளிலேயே ஆங்கிலத்தில் "ரைம்ஸ்" எனப்படும் ஓசையைப் பிரதானமாகக் கொண்ட பாடல்களைச் சொல்லித் தருகிறார்கள். அந்தப் பாடல்களைக் குழந்தைகள் வீட்டிற்கு வந்து தங்கள் மழலையில் பெற்றோர்களிடம் பாடிக் காட்டும்போது, அவர்கள் மனம் குளிர்ந்து போகிறார்கள். 

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமும் குழந்தைகளை அந்தப் பாடல்களைப் பாடிக் காட்டச் சொல்லுகிறார்கள். பாடல்களின் பொருள் புரிகிறதோ இல்லையோ, அந்தப் பாடலின் வரிகளுக்கேற்ப குழந்தைகளும் பாவங்களை அழகாகக் காண்பிக்கின்றனர். எதைக் கற்பித்தாலும் உடனே அதனை உள்வாங்கிக் கொள்ளும் வயது. அந்தக் குழந்தைகள் தாய் மொழி தவிர மற்ற மொழிகள் எத்தனை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள நாம் ஊக்கமளித்தல் அவசியம். ஆனால் அதே நேரம் நம் தாய் மொழிதானே என்று அதனை அலட்சியப் படுத்திவிடக் கூடாது. 

ஆரம்ப வகுப்புக்களில் தமிழிலும் அதுபோன்ற அழகிய பாடல்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். இப்போதும் சில இடங்களில் தமிழில் சில பாடல்களைச் சொல்லித் தருகிறார்கள். அவை இன்னமும் அதிகமாக இருத்தல் அவசியம். நம் நாட்டு கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஒத்து வருகின்ற மழலைப் பாடல்கள் புதிதாக இயற்றப்பட வேண்டும். 

அவை இளம் சிறார்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் இதுபோன்ற மழலைகள் பாடல்கள் சிலவற்றை நூலாக வெளியிட்டிருக்கிறது. அவற்றையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். 'ரெயின் ரெயின் கோ அவே", "லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டெளன்" போன்ற பாடல்களுக்குப் பதிலாக நல்ல தமிழ்ப் பாடல்களைப் பயிற்றுவிக்கலாம். இதில் ஆர்வமுள்ள கவித்துவம் நிறைந்த நண்பர்கள் புதிதாகப் பாடல்களை இயற்றி அனுப்புங்கள். நம் பாரதி இலக்கியப் பயிலகம் அவற்றைத் தேர்ந்தெடுத்து நமது வலைப்பூவில் வெளியிடலாம். குழந்தைகள் பாட அவற்றை நாம் அர்ப்பணிப்போம். நன்றி.

இது குறித்த ஒரு வேதனைக் கதையை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். 1976இல் "கல்கி" இதழில் வெளியான இந்த விவரங்களை இப்போது மீண்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கீழே காணப்படும் ஆங்கில Rhyme பாடல் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். படியுங்கள்.

Ring A Ring O roses
A pocket full of poises
A tishoo! A tishoo! we all fall down
A Ring. A Ring of Roses. A pocketfull of poises
Ash-a Asha-a All stand Still.


"கான்வெண்ட் பள்ளிகளில் படிக்கும் கிண்டர்கார்டன் குழந்தைகள் பாடி ஆடும் நர்சரி ரைம்தான் இது. ஆனால் இந்த நான்கு வரிகளுக்கும் பின்னால் ஒரு சோக சரித்திரமே உள்ளது. வேடிக்கைக்காக எழுதப்பட்ட வரிகள் இல்லை இவை. கொள்ளை நோயான பிளேக் நோய் லண்டன் மாநகரில் ஆயிரக்கணக்கானவரை கொள்ளை கொண்டு போனபோது மனத் தெம்புக்காக எழுந்த பாடல் இது. தி கிரேட் பிளேக் ஆஃப் லண்டன் (Great Plague of London) என்று பெயர் பெற்ற அந்தக் கொள்ளை நோயால் லண்டன் தெருக்களிலே பிணங்கள் குவிந்தன. Ring O Roses - ரோஜாக்கள் என்று குறிக்கப்பட்டது ரோஜா போல சிவந்த உடலில் உண்டாகும் கட்டிகளை. Pocket full of Poises என்பது பிளேக் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மக்கள் தங்கள் சட்டைப் பைகளில் (Pockets) எடுத்துச் சென்ற வாசனைப் பொருட்கள். tishoo, tishoo என்கிற வரிகள் "தும்மல் தொடங்கியவுடன் தொலைந்தோம் இன்று" என்று ஆற்றாமையினால் எழும் ஓசை.

கொள்ளை நோயாம் பிளேக்கின் கொடுமையிலிருந்து தப்ப வழியறியாது தவித்த நேரத்தில், பயத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த வரிகள் இவை."

Rain Rain go away என்றும் London Bridge is falling down என்றும் இவர்கள் பாடுவது நமக்குப் பொருத்தமாக இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள். இனி தமிழில் மழலைப் பாடல்களைச் சொல்லித் தர முயற்சி செய்யுங்கள். பள்ளிகளில் இல்லாவிட்டாலும் வீட்டில் நாமே சொல்லித் தரலாமே. வாழ்க தமிழ் என்று உரக்கக் கூச்சலிட்டால் மட்டும் போதாது. தமிழை வாழவைக்க மழலைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டுமே! செய்வீர்களா? நிச்சயம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.


"மழலைத் தளிர்கள்"

(இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், மைசூர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்திய அரசு மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல். குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கியது. இதிலிருந்து சில பாடல்களை முதல் தவணையாகத் தருகிறோம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்)

இந்த நூலின் அணிந்துரையிலிருந்து சில பகுதிகள். "இந்திய மொழிகளில் குழந்தைகளின் இலக்கியம் பெருகிவரும் தற்போதைய நிலையிலும் மழலையர் பாடல்களில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. ஆங்கில மொழியில் உள்ள மழலையர் பாடல்களால் இத்தகைய இடைவெளிகள் நகர மத்தியதர மக்களுக்காக நிரப்பப்படுகின்றன. ஆங்கில மழலையர் பள்ளிகளில் இவை ஊக்கப்படுத்தப் படுகின்றன. சமூகவயமாக்கம் என்ற நிலையில் ஒரு குழந்தையானது தன் தாய்மொழியில் செவியுறும் பல்வகை ஒலிகளைக் கற்றுக் கொள்வதும் அவற்றில் பயிற்சி பெறுவதும் தேவையானவை. ஒரு குழந்தையானது தன் தாய்மொழியின் மீது கொள்ளும் பற்றுக்கு முதல் படியாக இவ்வனுபவம் அமைகிறது. ......

"இந்த நூலில் உள்ள தமிழ் மழலைப் பாடல்கள், குழந்தைகளின் வாழ்வோடு தொடர்புடைய அனைத்துவகை நிலைகளையும் கொண்டதாய் அமையும். இப்பாடல்கள் வீடுகளிலும், பள்ளிகளிலும், தெருக்களிலும் பாடப்படும் பொழுது அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். இம்முயற்சி, குழந்தைகளின் தளிர் மனங்களில் இந்திய மொழிகளைப் பதிய வைக்கவும், வளர வைக்கவும் ஒரு முன்னேற்றப் படியாக அமையும்."
திரு இ.அண்ணாமலி, முன்னாள் இயக்குனர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.

இனி சில பாடல்களைப் பார்ப்போம். அவற்றைப் படிப்பதோடு சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். அவை குழந்தைகளின் வாழ்வோடு தொடர்புடையதாகையால் குழந்தைகளுக்குப் பயன்படும். குழந்தைகள் தாய்மொழியில் பாடவும் பயிற்சி கிடைக்கும். முயன்று பாருங்கள். தொடர்ந்து மேலும் சில பாடல்களை ஒவ்வொரு நாளும் தர முயற்சி செய்கிறேன்.

1. "நீ பிறந்த நாளிது"

நீ பிறந்த நாளிது
நீ பிறந்த நாளிது

அப்பா தருவார் பூப்பூச் சட்டை
அம்மா தருவாள் கிண்கிண் கொலுசு
தாத்தா தருவார் டிண்டிண் கடியாரம்
நானே தருவேன் ஆயிரம் முத்தம்.

2. பாப்பாக் கண்ணு

பாப்பாக் கண்ணு பாப்பாக் கண்ணு
படுத்தி ருக்குதாம் - மேலே
பச்சை வண்ணப் பொம்மைக் கிளிகள்
பறந்து சுற்றுதாம்.

மேலே தொங்கும் பொம்மைக் கிளியை
முறைத்துப் பார்க்குதாம் - பாப்பா
காலை காலை ஆட்டிக் கொண்டு
கையைத் தட்டுதாம்.

பொக்கை வாயைத் திறந்து காட்டிப்
புன்ன கைக்குதாம் - பாப்பா
பொம்மைக் கிளியை எட்டி எட்டிப்
பிடிக்கத் தாவுதாம்.

3. குறும்புக்காரப் பட்டு

எங்க பாப்பா பட்டு
இட்டுக் கொள்வாள் பொட்டு

தட்டில் உள்ள லட்டு
எனக்குத் தருவாள் பிட்டு

தாத்தா தலையைத் தொட்டு
தலையில் வைப்பாள் குட்டு

குட்டிப் பொண்ணு பட்டு
குறும்புக்கார சிட்டு.

4. சிரிக்கும் பாப்பா

சின்னப் பாப்பா நானு
சீனிப் பாப்பா நானு
குட்டிப் பாப்பா நானு
குழந்தைப் பாப்பா நானு
சிட்டுப் பாப்பா நானு
சிரிக்கும் பாப்பா நானு.



5. பாப்பா தொப்பை

தொப்பை தொப்பை
என்ன தொப்பை
தொந்தித் தொப்பை
போடப் போட
விரியும் தொப்பை
போடா விட்டால்
சுருங்கும் தொப்பை
யாரு தொப்பை
பாப்பா தொப்பை.


6. கண்ணுப் பாப்பா

செல்லப் பாப்பா சிரித்திடு
ஹ ஹ ஹ ஹா

சீனிப் பாப்பா குதித்திடு
தை தை தை தை..

தங்கப் பாப்பா அழுதிடு
ம்.... ம்.... ம்.... ம்...

சுட்டிப் பாப்பா குரைத்திடு
லொள் லொள் லொள்

கண்ணுப் பாப்பா கரைந்திடு
கா... கா... கா... கா...


7. முத்தம் தருவேன்

ஆடிப் பாடிக் கைகோத்து

அம்மா என்னோடு விளையாடு!

அம்மா உனக்கு சும்மா நான்

ஆசை முத்தம் தருவேனே!


8. அப்பா! அம்மா!!

அப்பா அருகே வந்தாரே

ஆப்பிள் வாங்கித் தந்தாரே

இனிக்கும் முத்தம் தந்தாரே

இனிதே நானும் சிரித்தேனே.


எங்கள் அம்மா வந்தாங்க

ஏறிக் கொண்டேன் தோள்மீதே

உண்ணச் சோறு தந்தாங்க

உவந்தே நானும் உண்பேனே!


9. அம்மா சோறு ஊட்டு.

அம்மா சோறு போட்டு

அள்ளி வாயில் ஊட்டு

நிலவை எனக்குக் காட்டு

நிறைய கதைகள் கேட்டு

தொட்டில் கட்டிப் போட்டு

தூங்கிடப் பாடு பாட்டு

தொட்டிலை நீயே ஆட்டு

தூங்கிடுவேனே கேட்டு!


10. அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா

ஆசை உள்ள அம்மா!

உன்னை விட்டு அம்மா

இருக்க மாட்டேன் அம்மா!

கதைகள் சொல்லு அம்மா

கேட்டு மகிழ்வேன் சும்மா!

கண்கள் விழிப்பாள் அம்மா

அழுதால் எழுவாள் அம்மா!

அன்பின் எல்லை அம்மா

உன்னை என்றும் மறவேன் அம்மா!




11. அம்மா அம்மா வந்திடுவாய்!

அம்மா அம்மா வந்திடுவாய்
ஆசை முத்தம் தந்திடுவாய்

கண்கள் போல என்னை நீ
கவனத்தோடு காத்திடுவாய்

உன்னைப் போல வளர்ந்திடுவேன்
உன் உள்ளம் மகிழ படித்திடுவேன்

அம்மா அம்மா வந்திடுவாய்
ஆசை முத்தம் தந்திடுவாய்.

12. மும்பை மாமா வந்தாரு

மும்பை மாமா வந்தாரு

பந்து எனக்குத் தந்தாரு

தட்டித் தட்டி விளையாடு

தங்கப் பாப்பா என்றாரு.

தம்பிக்கு ஒன்று தந்தாரு

தங்கைக்கு ஒன்று தந்தாரு

எங்க மாமா வந்தாரு

இவரைப் போல யாருண்டு!


13. தாத்தா! தாத்தா!

தாத்தா நீங்க என்னைப் போல

பாப்பாவாக இருந்தப்போ

எப்படி யெல்லாம் இருந்தீங்க

என்ன வெல்லாம் செஞ்சீங்க.

உங்க தாத்தா உங்களுக்கு

கதைகள் எல்லாம் சொன்னாரா?

சொன்ன கதையை எங்களுக்குச்

சொல்லித் தாங்க இப்போது

தாத்தாவாக நானும் ஆனா

சொல்லித் தருவேன் பாப்பாவுக்கு!


14. எங்கள் தாத்தா.

தாத்தா தாத்தா வந்தாரு

தடியைக் கீழே வச்சாரு

கட்டி முத்தம் தந்தாரு

தலையைக் கோதி விட்டாரு

பரிசு ஒன்றைத் தந்தாரு

கண்ணே உனக்கு என்றாரு

புதுசா சட்டை தந்தாரு

போட்டுப் பார்த்து மகிழ்ந்தேனே!


15. குடும்பம்

அம்மா என்னை அணைத்தால்

அன்பு முத்தம் கொடுப்பாள்

அப்பா என்னை அழைத்து

அங்கும் இங்கும் அலைவார்

அண்ணன் என்னைத் தூக்கி

அழுகை நிறுத்தச் சொல்வான்

அக்கா என்னைக் கொஞ்சி

அழகாய் சிரிப்பாள் அன்பாய்!


16. பொம்மை

சின்னச் சின்ன பொம்மை

குட்டிக் குதிரை பொம்மை

சிவப்பு நிறத்து பொம்மை

சாவி கொடுத்தால் ஓடுது

எங்க மாமா கொடுத்தது

எனக்கு ரொம்ப பிடிக்குது

குட்டி குட்டி பொம்மை

குட்டிக் குதிரை பொம்மை. 

பாட்டி கொடுத்த பொம்மை

பல்லைப் பல்லைக் காட்டுது

தாத்தா கொடுத்த பொம்மை

தள்ளாடி நடக்குது.









Saturday, July 28, 2012

தஞ்சை மராத்திய மன்னர் வாரிசுகள்

தஞ்சை மராத்திய மன்னர்  வாரிசுகள்

கி.பி. 1674 முதல் 1855 வரை தஞ்சையை மராத்திய மன்னர்கள் ஆண்டார்கள். அதன் பின்னர் அவர்கள் வாரிசுகள் யார்? 1674 முதலான மன்னர் பரம்பரை விவரங்களை இங்கு பார்க்கலாம். விவரமான வரலாற்றுச் செய்திகளுக்கு மராத்தியர் வரலாறு எனும் பகுதியை இதே வலைத்தளத்தில் பார்க்கலாம். முதன் முதலில் தஞ்சையில் மராத்திய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஏகோஜி. இவர் சத்ரபதி சிவாஜி ராஜாவின் இளைய சகோதரர். இவரைத் தொடர்ந்த பல மன்னர்கள் ஆண்டபின் 1855இல் சிவாஜி II என்பவரின் காலத்துக்குப் பின் ஆங்கில கம்பெனியார் தஞ்சை ராஜ்யத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். இனி ஏகோஜி தொடங்கி தொடர்ந்து வந்த மன்னர்கள் விவரங்களைப் பார்ப்போம்.

1674 - 1686 ஏகோஜி என்றும், வெங்கோஜி என்றும் அழைக்கப்பட்டவர். இவர் சத்ரபதி சிவாஜியின் இளைய சகோதரர்.
1686 - 1711 ஷாஜி I என்றும் ஷாகுஜி என்றும் அழைக்கப்பட்டவர்.
1711 - 1727 சரபோஜி I 
1727 - 1735 துக்கோஜி
1735 - 1738 துக்கோஜியின் மரணத்துக்குப் பின் நாட்டில் குழப்பம் நிலவியது.
1735 - 1736 ஏகோஜி II 
1735 - 1738 சையீது (அமைச்சராக இருந்த இவர் பதவியைப் பறித்துக் கொண்டார்)
1736 - 1737 சுஜனாபாயி
1737 - 1738 சையீதின் கட்டுப்பாட்டில் இருந்த சுஜனாபாயி அவனுக்கு எதிராக மாறி காட்டு ராஜா எனும் போலி ராஜாவை விரட்டியடித்தார். ப்ரெஞ்சுக்காரர்கள் உதவி பெற்று அந்த போலி ராஜா தஞ்சை மீது படையெடுத்தார். ஷாகுஜி II எனும் பெயரில் இவர் ஒரு ஆண்டு ஆட்சி புரிந்தார். பின்னர் பதவி இழந்தார்.
1738 - 1739 சவாய் ஷாஜி/ஷாகுஜி II/காட்டுராஜா
1739 - 1763 பிரதாபசிம்ம ராஜா. துக்கோஜியின் மகன். குழப்பங்களை அடக்கி நல்லாட்சி தந்தார்.
1749 இந்த ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியார் நாயக்க மன்னர்களின் வாரிசுகளுக்கு ஆட்சியைக் கொடுக்க விரும்பினர் ஆனால் முடியவில்லை.
1763 - 1787 துளஜாஜி. இவர் வாரிசு இன்றி மாண்டு போனார்.
1784 திப்புசுல்தானுக்கும் கிழக்கிந்திய கம்பெனியாருக்குமிடையே போர் 1780இல் நடந்தது. திப்புவின் படைகள் தஞ்சையை துவம்சம் செய்துவிட்டுப் போய்விட்டனர்.
1787 - 1793 சரபோஜி II துளஜாஜியின் ஸ்வீகார புத்திரன். 10 வயதில் பட்டத்துக்கு வந்தார்.
1787 - 1793 அமர்சிங். இவர் துளஜாவின் சகோதரன். 1793இல் பதவியைப் பறித்துக் கொண்டார்.
1793 - 1798 அமர்சிங். பதவி வகித்து 1798இல் காலமானார்.
1798 - 1824 சரபோஜி II மீண்டும் பதவிக்கு வந்து சிறப்பாக ஆட்சி புரிந்தார்.
1799 கிழக்கிந்திய கம்பெனியார் தஞ்சையைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் மட்டும் ராஜாவின் ஆட்சியின் கீழ் இருந்தது.
1824 - 1855 சிவாஜி II வாரிசு இல்லாமல் காலமானார். 
1855 ஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனி வசம் போய்விட்டது. டல்ஹவுசியின் நாடுபிடிக்கும் திட்டத்தின்படி வாரிசு இல்லாத நாடுகளை அவர்கள் எடுத்துக் கொண்டனர். வைஸ்ராய் எனும் அதிகாரி நியமிக்கப்பட்டு ஆட்சி நடந்தது.
மேலே கண்ட விவரப்படி 1855இல் சிவாஜி II ராஜா வாரிசு இல்லாமல் இறந்து போனமையால் கிழகிந்திய கம்பெனியார் ஆட்சி அதிகாரங்களைப் பறித்துக் கொண்டனர். சிவாஜி ராஜாவின் மகள் ஆட்சிக்கு உரிமை கோரினார். அவருக்கு ராஜாவின் வாரிசு என்ற அங்கீகாரம் கிடைத்தது; ஆட்சி அதிகாரம் இல்லை. சிவாஜி II ராஜாவின் ஸ்வீகார புத்திரன் மூலம் பிறந்த பேரன் வாரிசு உரிமை கொண்டாடினார்.

1855 - 1886 விஜய மோகனா முதும்பர்பாயி. சிவாஜி II இன் புதல்வி.
1859 விஜயா ஹோல்காபூர் இளவரசர் சகாராம் சாஹேப் என்பவரை மணந்தார். சகாராம் சாஹேபுக்கு வாரிசுரிமை
சிவாஜி II ராஜாவின் ஸ்வீகார புதல்வன் சிவாஜி III
பிரதாப்சிங் III இவர் சிவாஜி IIIஇன் சகோதரர்.
ராஜாராம் சாஹேப் இவர் சிவாஜி IIIஇன் புதல்வர் ஷாஹாஜி ராஜேயின் மகன்.
சிவாஜி IV இவர் ராஜாராம் சாஹேபின் புதல்வர்.
1947 - 1948 தஞ்சாவூர் ராஜ்யம் இந்திய குடியரசின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டது.
சிவாஜி V இவர் சகோதரி மகன்

பாபாஜி ராஜா போன்ஸ்லே தற்போதைய இளவரசர். இவர் சிவாஜி IVஇன் புதல்வர். 1969இல் பிறந்த இவர் ஒரு பொறியாளர். இவருக்கு இரண்டு புதல்விகள் உண்டு.





Photo:M_Moorthy 
 
Babaji Raja Bhonsle.

THANJAVUR: Self-effacement, humility and warmth are not the qualities that one often associates with royalty. But that is precisely what sets the Senior Prince of Thanjavur apart.
With an imposing name like Babaji Rajah Bhonsle Chattrapathi, the man in flesh dispels the regal, forbidding image of royalty. Absolutely down-to-earth, unpretentious, with a welcoming smile and mellow tones, he captures princely responsibilities succinctly. “It is like running in a rally. For now, the baton has now come to me. I just have to pass it on to the next generation safely. ”
The 13th descendant of the Maratha kings of Thanjavur, Babaji is the hereditary trustee of the Palace devasthanam with 88 temples under his fold. Forced to inherit at 16 due to the untimely death of his father, the schoolboy prince found on his hands, what he describes as a ‘sinking ship'. “The situation was pretty grim. The administration of the temples was in bad state. There were so many unpaid bills and pending salaries.”But the Prince took up the reins after qualifying himself with a degree in civil engineering at SASTRA College, Thanjavur. More than 70 temples have been consecrated after he assumed responsibility. Yet, he gives himself very little credit but attributes it to Divine Providence and public support. “I am more of a facilitator between the government and people, encouraging philanthropic activities and government help to serve society.”
Not many, even royalty can lay claim to a 1000 year-old marvel like the Brahadeeshwarar, which is one among the 88 temples. His role, as he puts it, is bridging the ASI and HR and CE by mediating the spiritual and preservation activities of the temple.
He strongly advocates promoting the welfare of tenants who occupy temple lands and believes that Chatrams created by the Marathas could be put to better use if they are converted to cultural centres generating employment for towns in the vicinity of ThanjavurAs the Convenor of INTACH, Thanjavur Chapter, Babaji has donned the mantle of custodian of art and culture, just like his forefathers. Conservation is his priority while he is passionate about promoting tourism.
“Around 3,000- 5,000 tourists visit the Big Temple daily. But such a number is not translated into economic figures. We have not tapped the tourism potential completely. If tourists are urged to spend a night instead of briefly halting in the town, the economy is bound to soar.”To promote the Palce as a tourist interest, he stresses on the need for a permanent maintenance fund and an integrated administration committee. Babaji is techno-savvy and is the promoter of an e-publishing unit town he has set up with friends.
He concludes with a candid confession, “My position and my personality are a complete mismatch. I can do a hundred things silently. But put me on a stage and I feel like a fish out of water.”




Prince of a secular dynasty
Unlike some in the North, this royal house in the South is battling to keep its property from falling to rack and ruin, and is an ideal study in contrasts, says KAUSALYA SANTHANAM.




FROM the royal homes of Rajasthan to those of Thanjavur is not just a journey in miles. It is a contrast in terms of wealth and lifestyles. Between the scions who have successfully turned their considerable properties into assets, and heirs battling to keep their rather meagre ones from falling to rack and ruin. It is to mark the difference in attitudes — between a government that is quite sensitive to its heritage and one that indifferently allows it to go to seed.
Babaji Rajah Bhonsle Chattrapathy, 34-year-old heir to the Maratha house, and a man acutely proud of his heritage, is battling to save it from literally falling apart. Unlike the North, Tamil Nadu has very few palaces. The Thanjavur Palace, one among the few royal dwellings in the State, is an impressive structure set in 120 acres. First built in the 15th Century, it was added on by successive generations of rulers. Since Thanjavur became a British residency in 1885 and the rulers were not granted a privy purse, the palace has nothing of the sweep and dimensions of the other grander princely houses in the country. But it is a lovely structure which is now owned by the Public Works Department (PWD) and the State Archaeology Department. To one's amazement certain rooms in it are used by the Government as godowns to store paddy!
The prince is a man in step with the times with a degree in engineering but has chosen to be prince "full time" in order to play his role properly. "I'm hereditary trustee of 88 temples," he tells you. Thanjavur, besides being the cradle of art and culture is also a most vibrant spiritual centre. The magnificently built temples in this region call the devotee and aesthete again and again, the crowning glory being the Brihadeeswara temple (the Big Temple). Built by Raja Raja Chola (985-1012 A.D.), the structure that soars to a height of 64.8 metres, is a mind blowing spectacle even for a regular visitor. The prince and his family members worship here every day. The secular tradition handed down by his ancestors ensures that Babaji supports churches and mosques in the region.
When the income does not match the obligations, life can be tough especially if you have a fierce pride in your traditions and lineage. The prince does his best. "Frankly it is quite difficult," he admits. The family is granted a pension of Rs. 2,500 by the Government. "I don't want to refuse it as it means we are recognised as the former ruling family." He loves the privileges royalty brings. "The late President Shankar Dayal Sharma came here in 1991. He later gave me the opportunity of attending the World Marathi Conference," he tells you proudly.
Thanjavur, the capital of many distinguished dynasties, was the seat of the mighty Cholas and then the equally powerful Pandyas. The immediate predecessors of the Marathas were the Nayaks.
"Our jewels and rich clothes were seized by the British. After a long legal battle, we got judgment in our favour in 1939," says Bhonsle, "but we were never very wealthy." That did not stop these rulers from pursuing philanthropic activities. The Chatrams (rest houses) for travellers built by the Maratha kings are now in government control and continue to house the weary and the sick.
The prince is enthusiastic about heritage conservation, "We will be happy if the Government makes use of our expertise. Thanjavur gets 5,000 visitors a month. But hardly 500 visit the Palace. Since many tourists, especially foreigners are fascinated by royalty, I have been organising an event called `An evening with the Prince'," says the modest Bhonsle with a tinge of pride. A bullock cart ride, nagaswarammusic, traditional dance and the reading of palm leaf documents make the day for the tourist. "It would be good for tourism if artists and craftsmen are given space within the palace premises to sell their products."



The prince has also had a role to play in initiating the annual classical dance festival at the Big Temple along with the Collector Shanmugarajeswaran, in 1994. It was under the suggestion of Collector Palaniappan in 1951 that the Art Gallery with its fabulous bronze collection was set up in the palace precincts.
The fragrance of dance and music envelops the green Thanjavur delta. The arts were nurtured by a line of Maratha kings, especially Serfoji II. In his court was the Thanjavur Quartet, the four brothers who shaped the modern Bharatanatyam repertoire.
The art of the Marathas can be glimpsed in the colourful frescoes in the grand Durbar Hall of the palace, once the venue for glittering assemblies and now wearing a forlorn look. Signs of neglect are pervasive in the premises. Shrubs grow out of stately towers and peeling paint and flaking plaster tell their own tale. "Many of the portions I played in as a child have long since disappeared," says the prince. The portion where he resides with his wife, two small daughters and widowed mother wears a brave look, especially the room formerly used for sumptuous feasts. The sitting room is a large hall, dark and cool, with some low slung furniture and huge paintings on its walls. "This Thanjavur painting of Radha and Krishna belongs to the 17th Century and yes, that is a genuine Ravi Varma," he tells you. There is nothing to distinguish this living quarters from those of a genteel aristocratic family that has known better times. "We have always lived a simple life," he says.
But that this is royalty, even without its trappings, is made clear by the marriage alliances. The Prince was married six years ago to Gayatri Raje, niece of the former ruler of Baroda. Alliances are usually arranged with the house of Satara and Baroda though "in the past we would choose our bride from within Thanjavur". The Maratha rulers of Thanjavur integrated perfectly in the Tamil country, enriching it with folk arts such as Poikkal Kudirai (dummy horse dance) from Maharashtra. They introduced the Thanjavur style of painting with the cherubic Krishnas and other gods; these paintings are now seen lighting up living rooms everywhere.



We are joined by Babaji's wife, his sister and brother-in-law who are visiting from Bahrain. Babaji takes his duties as head of the family seriously." My younger brother works in a private firm and a younger sister, who is married, lives in Mumbai."
Babaji is referred to as the Senior Prince, "My grandfather married twice." The descendant of the second wife, the Junior Prince, who works in a clerical capacity in a bank, occupies another portion of the palace. Relations between the two are most cordial and Babaji takes you to the other wing to meet him and his family. The hall there has been converted into a museum putting together bits of family memorabilia, royal artifacts and newspaper clippings — quite an assortment displayed in a touching, homespun way. Babaji also has a museum being put in place but with a rather more sophisticated look. "I underwent training in preservation methods at the Madras Museum for three months," he tells you as he shows you around. And the entrance fee for the museums? "Re. One and Rs. Two." Surely it should be priced higher, you ask with incredulity. The brothers just smile.
"The Kanchi Peetam is our Guru Peetam," says Babaji as he leads you to the private shrine of the royals situated at the entrance to the palace. Bas reliefs, made out of the gold from the ashes of his ancestors, are kept in the shrine. "The Sankaracharya of the Kanchi Peetam came to Thanjavur when the Mughals invaded the South and lived here for many years. The Paramacharya has said I must look after the temples well."
In the shrine of Lord Chandramouleeswarar, the tutelary deity of the Marathas, the priests intone the mantras as the lingam is bathed in milk, sandalwood paste and water. At that moment, the outside world recedes into a blur and it is easy to believe the prince is a privileged member of a House that still enjoys wealth and power. And that Time has not bypassed a once well known dynasty...
Printer friendly page   







Thursday, July 26, 2012

பழைய சென்னை மாநகர் Part I


பழைய சென்னை மாநகரைப் பார்க்க வேண்டுமா?

நம்மில் அனேகர் இன்றைய சென்னை நகரைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் எப்படி இருந்தது. அன்றைய தினம் அந்த பழைய சென்னையைப் பார்த்தவர்கள் இப்போது பழைய நினைவுகளில் அசைபோடவும், இன்றைய தலைமுறையினர் பழைய சென்னையைப் பார்த்து பெருமூச்சு விடவும் ஓர் அரிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கிறார் எனது அருமை நண்பரும், நான் பணியாற்றிய அலுவலகத்தில் என்மீது அபார அன்பு பாராட்டியவரும், என் நன்மையில் அக்கறை கொண்டவருமான திரு சி.ஆர்.சங்கரன் அவர்கள். இந்தப் புகைப் படங்களை அவருக்கு அனுப்பியவர்கள் வேறு நண்பர்களாக இருக்கலாம். என்றாலும் அவை அத்தனையும் அரிய பொக்கிஷங்கள். இந்தப் புகைப்படங்களை நண்பர் சி.ஆர்.சங்கரனுக்குக் கொடுத்துதவிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. இனி மூழ்கிவிடுங்கள் பழைய சென்னை நினைவுகளில்.





மேலும் சில புகைப் படங்களை அடுத்த பதிவில் தொடர்ந்து பாருங்கள்.

பழையசென்னைமாநகர் Part II



பழைய சென்னை மாநகரைப் பார்க்க வேண்டுமா?

நம்மில் அனேகர் இன்றைய சென்னை நகரைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் எப்படி இருந்தது. அன்றைய தினம் அந்த பழைய சென்னையைப் பார்த்தவர்கள் இப்போது பழைய நினைவுகளில் அசைபோடவும், இன்றைய தலைமுறையினர் பழைய சென்னையைப் பார்த்து பெருமூச்சு விடவும் ஓர் அரிய வாய்ப்பை நமக்குத் தந்திருக்கிறார் எனது அருமை நண்பரும், நான் பணியாற்றிய அலுவலகத்தில் என்மீது அபார அன்பு பாராட்டியவரும், என் நன்மையில் அக்கறை கொண்டவருமான திரு சி.ஆர்.சங்கரன் அவர்கள். இந்தப் புகைப் படங்களை அவருக்கு அனுப்பியவர்கள் வேறு நண்பர்களாக இருக்கலாம். என்றாலும் அவை அத்தனையும் அரிய பொக்கிஷங்கள். இந்தப் புகைப்படங்களை நண்பர் சி.ஆர்.சங்கரனுக்குக் கொடுத்துதவிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. இனி மூழ்கிவிடுங்கள் பழைய சென்னை நினைவுகளில்.


மேலும் சில புகைப் படங்களை அடுத்த பதிவில் தொடர்ந்து பாருங்கள்.

Wednesday, July 25, 2012

சென்னையில் டிராம் வண்டி

From: vasuvanaja <srinivasanvanaja@gmail.com>
Subject: சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!! நீங்கா நினைவலைகள் !!!
To: "Ramkripa Google Group" <ramkripa@googlegroups.com>
Date: Tuesday, July 24, 2012, 9:04 PM

Dear All, 
As a kid I have a fair memory of trams in Madras.
My parents and my uncle used to take me from Central Station [just opposite to GH] to Mylapore Luz Corner.
Enjoy this write up from Dinathanthi. Regards, vasu



சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!! நீங்கா நினைவலைகள் !!!* இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
* இந்த வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.

மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள். இன்றைய தலைமுறை 'மதராசபட்டினம்' போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.

1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி, Messrs Hutchinson & Coஎன்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகே எலெக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6ந் தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்து போல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநரும், கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள். திடீரென டிக்கெட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே இங்கிருந்தபடி தாவிவிடுவார். டிக்கெட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாத சீசன் டிக்கெட் முறைகளும் அமலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10 வசூலிக்கப்பட்டது.

சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச் செல்லலாம். அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட வில்லை. அதுவும் இல்லாமல், பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. மெட்ராசில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக் கொண்டே இருந்தன. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
டிராம் வண்டி மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்த பயனும் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் டிராம் வண்டிகளை conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்காக சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதற்கு நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்கு மேல் ஒயர்கள் போட்டு, அதில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு ஒப்புக் கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.

இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900இல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. பின்னர் 1904இல் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953ஆம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப் போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இயக்க அந்த நிறுவனமும் தயாராக இல்லை, அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள், அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் நினைவுப் பொருளாக மெல்ல மாறிப் போயின.


நன்றி - தினத்தந்தி

--
Parthasarathy Srinivasan[vasu]
Camp Dubai :)
என்றும் எப்பொழுதும் அன்புடன்
பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் என்கின்ற வாசுவனஜா 
"Every Sunrise Gives Us One Day More To Hope!!!"

குழாயடி


குழாயடி

ஊர்க்கோடியின்
குழாயடியில் கூட்டம்!
தங்கம் தோண்டி எடுக்க அல்ல!
இலவச
தண்ணீர் பிடிக்கத்தான்!

கூட்டம் கூடினால்
கச்சேரி களைகட்டும்.
குழாயடிக்கு மட்டும் விலக்காகுமா?

"விளங்கமாட்டான்
அடுத்தவனையும்
விளங்கவிடமாட்டான்"
இந்த
வட்டார மொழி
தட்டாமல் குழாயடியிலும் கும்மியடிக்கிறது!

அங்கு
குரலெடுத்து
குழு சேர்த்து
குடம் பிரித்து
வடம் இழுக்க
இடம் வழுக்க
தடம் மாறி தடுமாறுது!
குடம் உருண்டு
சேறும் தெளிக்குது!-இருந்தும்
புழுதி கிளம்ப
ஆட்டமும் தொடருது!

குழாயில் நீர் இல்லையெனில்
குடமும் காலி! இடமும் காலி!
பிறகு
கும்மியடிக்க
ஏது இடம்?

கும்மிப்பாட்டை நிறுத்திவிட்டு
குடத்தை நிரப்பப் பாருங்கள்.
குழாயில்
நீர் நின்றுவிடப் போகிறது!

-தனுசு-

Monday, July 23, 2012

ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1

From: vasuvanaja <srinivasanvanaja@gmail.com>
Subject: ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1
To: "Ramkripa Google Group" <ramkripa@googlegroups.com>
Date: Sunday, July 22, 2012, 11:04 AM

22-07-2012
Sourced from another group and presenting the same in 7 parts for easy reading. 
Our due thanks to the original up loader.
regards, 
vasu

ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1


“கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணிமாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர், நான்மறைகள் ஓதும் ஊர், வில்லிபுத்தார் வேதக்கோனூர்” என்று புகழப்பெற்ற தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்.

‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று பரந்தாமனை வாழ்த்திப் பாடிய பெரியாழ்வார் தோன்றிய திருத்தலம்; பூமாலை சூடிக் கொடுத்தும் பாமாலை பாடியும் அவனையே மணாளனாக வரித்த ஸ்ரீஆண்டாள் அவதரித்த அருட்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். வியாஸபாரதம் அருளிய வில்லிபுத்தூர் ஆழ்வார் பிறந்த புனிதத்தலம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கி.பி.9ஆம் நூற்றாண்டில், குரோதன வருஷம் ஆனிமாதத்தில் வளர் பிறையில் சுவாதி நக்ஷத்திரத்தில் கருடனின் அம்சமாகத் தோன்றியவர் பெரியாழ்வார். இவர் பெயர் விஷ்ணுசித்தர். இவர் தமது நிலத்தில் நந்தவனம் அமைத்து, வடபத்ரசாயிக்குப் புஷ்ப கைங்கர்யம் புரிந்து வந்தார். இவருக்கு பட்டர்பிரான் என்று பட்டமும் அளிக்கப்பட்டது. ரங்கமன்னார் பெருமாள் மீது நானூற்று அறுபத்தொரு பாசுரங்கள் இயற்றினார். அவருடைய வளர்ப்புப் பெண் கோதை, தந்தை தொடுத்த மாலையை, சூடி மகிழ்ந்து, பின்பு ரங்கமன்னாருக்கு அணிவித்து மகிழ்ந்தவள். பாவைப் பாட்டுப் பாடியவள். நாச்சியார் திருமொழியும் பாடியருளியவள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோவிலின் இராஜகோபுரம் கவினுறு அழகும் இணையற்ற சிறப்பும் பெற்றுள்ளது. வடபத்ரசாயியாக, பெருமாள் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். புஜங்கசயனராக பெருமாள் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கிய நிலையில் சயனித்துள்ள பெருமாளின் அருகிலே பெரிய பிராட்டியும் பூமாதேவியும் காட்சி தருகிறார்கள். சூரியன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷியுடன், வில்லிபுத்தூர் ஊரை உருவாக்கிய ‘வில்லி’ என்பவரின் உருவமும் இங்குள்ளன.

ஆலிலைக் கண்ணனாக ஊழிக்காலத்தில் தோன்றும் மகாவிஷ்ணுவை, ஆதிசேஷன் இத்தலத்தில் சேவிக்கிறார். திருக்குருகூர், திருவரங்கம் போன்ற திருக்கோவில்களில் அரையர் சேவை, தாளமும் இசையும் கலந்து நடைபெறுகிறது. அதைப் போன்றே ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் இரண்டு தளங்களுடன் காட்சி தருகிறது. மேல் தளத்தில் பெரியாழ்வார் என்று போற்றப்படுகிற விஷ்ணுசித்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கீழே உள்ள தளத்தில் நரசிம்ம மூர்த்தியும், பன்னிரு ஆழ்வார்களும், தசாவதார மூர்த்திகளும் திவ்ய அனுக்ரஹ மூர்த்திகளாக சேவை சாதிக்கிறார்கள். மூல கர்ப்பக்கிரஹத்தில் ‘வடபத்ரம்’ எனப்படும் ஆலிலையில் வடபத்ரசாயியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபம் சக்கரத்தாழ்வார், உற்சவமூர்த்திகளுடன் நீண்டு அகன்று விளங்குகிறது.

வடபத்ரசாயியின் கோவிலை ஜடாவர்மன் குலசேகரத்தேவர் கட்டினார். தொடர்ந்து பாண்டிய மன்னர்களும் திருமலை நாயக்கரும் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருவரங்கன், கருடன் மீது தோன்றி இத்தலத்தில் ஆண்டாளை ஆட்கொண்டதால், இங்கு கருடன் கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டாளுக்குத் தனிக்கோவில் உள்ளது. கல்யாண மண்டபம், பந்தல் மண்டபம், ஸ்ரீஇராமர், ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதிகள் ஆகியன தவிர பிராகாரத்தில் பல ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

ஆண்டாள், கருவறையில் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். திருவரங்கனையே மணமுடிக்க விழைந்து, தந்தையுடன் அரங்கனுடன் ஒன்றறக் கலந்த நாயகி ஆண்டாள். இத்தலத்திலே, ரங்கராஜனாக மணக்கோலம் கொண்டு நிற்க, மணமகளாக ஆண்டாள் அருகிலே இருக்க கருடாழ்வார் பெருமானைக் கைதொழுது இருக்கும் ஒப்பரிய காட்சியைக் காணும் பேறு பெரும்பேறாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் உதித்த நன்னாளான ஆடிப்பூர உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி உத்திர நன்னாளில் பரந்தாமனின் கைத்தலம் பற்றிய மணநாளும் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

வடபத்ரசாயி கோவிலில் உள்ள புஷ்கரணி திருமுக்குளம் என்று அழைக்கப்படுகிறது. “மைத்துனன் நம்பி மதுசூதனன் தன்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி” என்று பாடியவள் ஆண்டாள் கண்ட கனவை மெய்ப்பிக்க பாவை நோன்பு நோற்று

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலை நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்”

என்று விரதம் காத்து, அரங்கனுடன் ஒன்றியவள் ஆண்டாள். நல்ல நாயகனை அடைய விரும்பி அவனையே மணந்து அவனுடன் ஒன்றிய ஆண்டாளின் திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்குள்ள கோவிலில் கருவறையில் திருமணக் கோலத்துடனே அரங்கன் ஆண்டாளுடன் சேவை சாதிக்கிறார். திருமணமாக வேண்டிய கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய வேண்டிக் கொள்ளும் திருமணத் தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் அடைந்த பேற்றினை அவளருளாலே நாமும் அடையலாம்.
--
 
 
Parthasarathy Srinivasan[vasu]
Camp Dubai :)
என்றும் எப்பொழுதும் அன்புடன் 
பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் என்கின்ற வாசுவனஜா 
"Every Sunrise Gives Us One Day More To Hope!!!"
 
 

"காட்டு ஆத்தாப்பழம்"

From: vasuvanaja <srinivasanvanaja@gmail.com>
Subject: இன்று ஒரு தகவல்-"காட்டு ஆத்தாப்பழம்"
இன்று ஒரு தகவல் --  "காட்டு ஆத்தாப்பழம்"  
புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.



--
Parthasarathy Srinivasan[vasu]
Camp Dubai :)
என்றும் எப்பொழுதும் அன்புடன்
பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் என்கின்ற வாசுவனஜா 
"Every Sunrise Gives Us One Day More To Hope!!!"

Saturday, July 21, 2012

மேம்பாலம்

பட்டத்து மேம்பாலம்

இந்தப்
பட்டிக்காட்டான்
பட்டணம் போனேன்.
ஒரு
பொட்டிக்கடை தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை-ஆனால்
தென்பட்டதோ  மேம்பாலங்கள்!

பஞ்சுமிட்டாய்
குச்சி ஐஸ்
தங்கிவிட்ட என் நாக்கில்
பிஸ்ஸாவும் பர்கரும்
சுவைக்கவில்லை-
போகட்டும்!

வேட்டியும்
லுங்கியும்
கட்டிக்கொண்ட இடுப்பில்
ஜீன்சும் ஷார்ட்சும்
நிற்கவில்லை-
போகட்டும்!

கட்டவண்டி
ரயில்வண்டி
ஏறிப்பார்த்த கால்களுக்கு
தூசியில்லா
ஏசி வண்டி
ஏறிப்பார்த்தால் பிடிக்கவில்லை-
போகட்டும்!

கட்ட மதகு
ஒத்த பாலம்
மேய்ந்துவந்த கண்ணுக்கு
பட்டத்து மேம்பாலம்
ஆச்சரியம்! அதிசயம்!!

ஆகாயத்தில் சாலை!
இந்த
மாயம் எப்படி ஆனது?
அன்றே இருந்திருந்தால்
ராமாயத்தில்
அனுமனுக்குப் பாத்திரம் இருந்திருக்காதே!

பாதையில் பளிங்கைப்  பதித்து
இதோ
வானத்தை நோக்கும் இந்தப்பாதை
போவது
இந்திரன் வீட்டுக்கா?

தூரத்திலிருந்து பார்த்தால்
அந்தரத்தில் ஒரு நதி!
நெருங்கிப் பார்த்தால்-
உயரத்தால்
கழுத்தில் வலி!

தொங்கும் தேராய் இருக்கிறது
இந்தத்
தார் சாலையில்
நூறு வாகனம் ஓடும் அழகு!

மத்தாப்பு இல்லாத தீபாவளியா?
கூரை இல்லாத வீடா?
இதயம் இல்லாத உயிர்களா?
மேம்பாலம் இல்லாத பட்டணமா?

தும்பிக்கையில் இருக்கு
யானைக்கு பலம்!
பட்டணத்துக்கு இருக்கு
அதன்
மேம்பாலத்தில் பலம்.!!

-தனுசு-