பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 7, 2012

"இனியவை நாற்பது" (6)

6. இனியது ஆறு. 

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். மிக எளிமையானவர். பிறருடன் அன்போடு பழகுபவர். அனைவரிடத்தும் நன்கு பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பவர். அப்படிப்பட்டவரிடம் பெரிய அளவில் வசதிகள் இல்லாவிட்டாலும், தன்னால் இயன்ற அளவுக்குப் பிறருக்கு உதவுவதைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார். அப்படிப்பட்டவர் வாழ்க்கை இனிமை உடைத்தது அல்லவா?

முற்றும் துறந்து காவியணியா விட்டாலும் பந்த பாசங்கள் நீக்கி, விருப்பு வெறுப்பு அற்றவராகத் துறவி போல வாழ்ந்து வந்த அந்த ஆசிரியர் பிறரிடம் பேசும்போது வெற்றுப் பேச்சுக்களைப் பேசமாட்டார். பயனுடைய சொற்களைத்தான் பேசுவார். அவர் அப்படிப் பேசும் அறிவார்ந்த மொழிகள் இனிமை பயக்கக் கூடியவை.

தனக்கென்று நல்ல வசதிகள், வாய்ப்புகள் இருந்த நிலையில் தகுதியில்லாத, வல்லமை அற்ற மக்களைத் தனது பாதுகாப்புக்காகக் கொள்ளுதல் தவறு அல்லவா? அப்படிப்பட்ட மக்களை நீக்கிவிட்டு தகுதி படைத்த வல்லவர்களைப் பாதுகாப்பாகக் கொள்ளுதல் இனிமை தரும். அந்தப் பாடல்.

"ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே
வாய்ப்புடையராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது."

பாற்பட்டார்: துறவு பூண்டவர்கள்.
பயமொழி: பயனுடைய சொற்கள்
வலவைகள்: வல்லமை

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.