பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, August 27, 2011

கிருத யுகம்


கிருத யுகம்

மகாகவி பாரதி "புதிய ருஷியா" என்ற பாடலை 'ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி' என்ற துணைத் தலைப்போடு பாடியிருக்கிறான். அந்தப் பாடலை

'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே
ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி: கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்'

என்று தொடங்கி, 'இரணியன் போலரசாண்டான் கொடுங்கோலன், ஜாரெனும் பேரிசைந்த பாவி' என்றும் ஜார்மூடன் 'தருமம் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான்' என்றெழுதி அந்த நாட்டில் 'பொய் சூது தீமையெல்லாம் அரணியத்திற் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்தோங்கினவே' என்றும் வருந்துகிறான்.

'உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை, பிணிகள் பலவுண்டு' ஆனால் 'பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வங்களுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெரும் கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டே இறப்பதுண்டு' என்று அங்கிருந்த நிலைமைப் படம் பிடித்துக் காட்டுகிறான்.

சில சொற்றொடர்கள் பாரதி புதிதாகக் கையாண்டவை. அவை அமரத்துவம் பெற்று நடைமுறையில் நமக்குப் பயன்பட்டு வருகிறது. அதில் ஒன்று: 'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்பது.

ஜார் மன்னனின் வீழ்ச்சியைச் சொல்லும் போது பாரதி, 'இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான் ஜார் அரசன்; இவனைச் சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்' என்கிறான். (இங்கு சொல்லப்படும் 'சுமடர்' எனும் சொல்லுக்கு 'அறிவில்லாதவன்', 'கீழ்மகன்' என்று அகராதியில் பொருள் கூறப்பட்டிருக்கிறது).

'புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே' சுமடர்கள் சரிந்து விட்டார்களாம். பிறகு உருவான நிலை என்ன?

"குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்தது பார்!" என்கிறான். அப்படி எழுந்ததுதான் "குடியரசு" என்று உலகறியக் கூறிவிட்டார் என்று உலகில் குடியரசு தோன்றியதையும் அந்தக் குடியரசு யாருக்காக, யார் சொன்னபடி, யாருடைய மேன்மைக்காக என்பதையும் குறிப்பிட்டுக் காட்டிவிட்டான்.

இனி இங்கே யாருக்கும் அடிமைத் தளை கிடையாது. இங்கு இனி அடிமை என்று எவரும் இல்லை. இந்தச் செய்தியை உலகோரே அறிக! என்று பறைசாற்றுகிறான். யுகங்களில் ஒன்றான -- பசி, பிணி, மூப்பு, இறப்பு, துன்பம், பூசல், போட்டி, பொறாமை, அழிவு என்றெல்லாம் துன்பம் தரும் கலி வீழ்ந்துவிட்டான். கலி வீழ்ந்தபின் தோன்றுவது எது? அதுதான் கிருதயுகம்.

கலியின் கேடுகள் முடிந்தது, கலிதரும் துன்பம் தொலைந்தது. மக்களுக்குத் துன்பங்களை மட்டும் காட்டி நின்ற கலியுகம் சர்வாதிகாரியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது என்பது பாரதி கருத்து. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் காலடியில் நசுக்கப்பட்ட பாரத சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, கல்வி இவைகளெல்லாம் ரஷ்யப் புரட்சிக்குப் பின் இங்கும் சுதந்திரக் காற்று வீசும். அந்நிய ஆதிக்கம் முடிவுக்கு வரும். மக்களால், மக்களுக்காக, மக்களே ஆளும் சூழ்நிலை வரும், அப்படிப்பட்ட சூழ்நிலைதான் நம்மை 'கிருத யுகத்துக்கு'க் கொண்டு செல்லும் என்பது பாரதியின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை நடந்தேறியதா? அன்றைய இடுக்கண் மத்தியில் அமைதியிழந்திருந்த பாரதிக்கு ரஷ்யாவில் தோன்றிய விடிவெள்ளி, நம் பாரத நாட்டிலும் தோன்றும், அப்படித் தோன்றுகின்ற மக்களாட்சி மக்களுக்கு 'கிருத யுகத்தின்' பலன்களையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் என்று நம்பியிருந்தான். வா கிருத யுகமே வா என்று வரவேற்பு கொடுக்கிறான். எழுக கிருத யுகம் என்பது அவனது ஆணை!

யுகங்கள் முறையே, திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், கிருதயுகம் என்பர். இந்நான்கு யுகங்களில் துவாபர யுகம் எப்போது முடிந்து, கலி எப்போது தொடங்கியது. மகாபாரத யுத்தத்தோடு துவாபரயுகம் முடிந்து கலி தொடங்கிவிட்டதாகக் கூறுவர். கலியின் கேடுகள் பெரியோர்கள் சொன்னபடிதான் நடந்து வருகின்றன. இது எத்தனை காலம் தொடரும். கிருத யுகம் எப்போது தொடங்கும்? இது துன்பத்தில் துவளும் அத்தனை உள்ளங்களும் விடை தேடுகின்ற வினா.

'பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே' என்பது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கு. எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்கிறான் கண்ண பரமாத்மா.

கலியுகத்தின் கால அளவைக் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். அது நான்கு லட்சத்து முப்பத்திரெண்டாயிரம் ஆண்டுகளாம்! அவர்கள் கணக்குப்படி இப்போது கலி 5115 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆகையால் கலி முடிய நாம் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதுதான். இப்போதைக்கு நமக்கு இந்தத் துன்பங் களிலிருந்து விடுதலை இல்லை.

ஆனாலும், கலியுகத்துக்குள் ஒரு கிருத யுகத்தை உருவாக்க மனிதன் ஏன் முயற்சி செய்யக் கூடாது? முயன்றால் முடியாததும் உண்டா? எண்ணிப் பாருங்கள். நற்காலம் பிறக்க நாம் முயற்சி செய்வோம்.

Wednesday, August 17, 2011

சென்னை நகரம்


பழைய சென்னை நகரத்தைப் பார்க்க வேண்டுமா?


இன்றைய சென்னை நகரத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்



. நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? அடடா! சந்தடியற்ற, அமைதியான கிராமப்புற சூழ்நிலையில் இருக்கும் சென்னை நகரத்தை நாம் மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று அனைவருமே நினைக்கக்கூடும். அமைதியும், இனிமையான சூழ்நிலையும் மனித மனங்களை சமனப்படுத்தி விடுகிறது.

N.S.B.Road


                                                                 Mount Road

                                        Mount Road Opposite to The Madras Mail Office


                                                                  Ice House

                                                           Pycrofts Road in 1890

                                                                Rippon Building


                                                        St. George Fort, Chennai
                                                          Mylapore Tank

                                                    Chennappattinam Harbour

ஊ.....ம் என்ன செய்வது. பழைய சென்னையை புகைப்படங்களிலாவது பார்த்து மகிழ்வோமே. பாருங்கள்.

Wednesday, August 10, 2011



“Tryst with Destiny” Speech
By Jawaharlal Nehru



சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்
இந்திய பாராளுமன்றத்தில் 1947 ஆகஸ்ட் 14
நள்ளிரவு 12 மணிக்கு பாரத சுதந்திரத்தை
வரவேற்றுப் பேசிய சொற்பொழிவு .....


Jawaharlal Nehru, gave this following speech as India's first Prime Minister to the Constituent Assembly in New Delhi at midnight on August 14, 1947. Though this speech is full of ideals and embellishments to inspire a nation, about to make a new beginning, it is historic and can be recognized as the first voice of Independent India.

'Awake to freedom' "Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially.

At the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes which comes but rarely in history, when we step out from the old to the new, then an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to India and her people and to the still larger cause of humanity.

At the dawn of history India started on her unending quest, and trackless centuries are filled with her striving and the grandeur of her successes and her failures. Through good and ill fortune alike she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune and India discovers herself again.

The achievement we celebrate today is but a step, an opening of opportunity, to the greater triumphs and achievements that await us. Are we brave enough and wise enough to grasp this opportunity and accept the challenge of the future?

Freedom and power bring responsibility. That responsibility rests upon this assembly, a sovereign body representing the sovereign people of India. Before the birth of freedom we have endured all the pains of labour and our hearts are heavy with the memory of this sorrow. Some of those pains continue even now.

Nevertheless, the past is over and it is the future that beckons to us now.

That future is not one of ease or resting but of incessant striving so that we might fulfill the pledges we have so often taken and the one we shall take today. The service of India means the service of the millions who suffer. It means the ending of poverty and ignorance and disease and inequality of opportunity. The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye. That may be beyond us but so long as there are tears and suffering, so long our work will not be over.

And so we have to labor and to work, and work hard, to give reality to our dreams. Those dreams are for India, but they are also for the world, for all the nations and peoples are too closely knit together today for any one of them to imagines that it can live apart. Peace has been said to be indivisible, so is freedom, so is prosperity now, and so also is disaster in this one world that can no longer be split into isolated fragments.

To the people of India whose representatives we are, we make appeal to join us with faith and confidence in this great adventure. This is no time for petty and destructive criticism, no time for ill-will or blaming others. We have to build the noble mansion of free India where all her children may dwell."
-- Speech by Jawaharlal Nehru


Sunday, August 7, 2011

கட்டுரைப் போட்டி


கட்டுரைப் போட்டி



மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி


பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:

மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.

விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.

3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com 

2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204

Saturday, August 6, 2011

அயல் மண்ணில் இந்து மத ஆலயங்கள்


அயல் மண்ணில் இந்து மத ஆலயங்கள் 

இந்திய நாடு புண்ணிய பூமி. இங்கு இமயம் தொடங்கி குமரி வரை எண்ணற்ற ஆலயங்கள். இந்து தர்மம் வேர்விட்டு வளர்ந்த மண் அல்லவா இது. பாரதியின் வாக்குப்படி "பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!". பாரத மக்கள் உலகத்து நாடுகள் அனைத்திலும் சென்று குடி புகுந்தனர். புகுந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் உழைப்பினை நல்கினர். அங்கெல்லாம் நமது பண்பாடு நாகரிகத்தை நிலை நிறுத்தினர். நமது இந்து சமய ஆலயங்களை அந்த ஊர்களிலெல்லாம் புதிதாகக் கட்டினர். இந்திய நாகரிகம் அங்கெல்லாம் கொடிகட்டிப் பறப்பதைப் பார்க்கிறோம். அப்படி உலகளாவிய நமது இந்து மத ஆலயங்களின் விவரங்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

                                                                  California U.S.

                                                                Birmingham U.K.

                                                          Malibu, California U.S.

                                          Angkor, Cambodia

                                          Shiva temple, Central Jawa, Indonesia

                                          Chicago, Illianois, U.S.

                                          Toronto, Canada

                                          Washington D.C. U.S.

                                          Swamynarayan temple, Neasden, U.S.

                                          Penang, Malasia

                                          Bridgewater, N.J., U.S.

                                          Bali, Indonesia

                                          Murugan temple, Sydney, Australia

                                          Atlanta, Georgia, U.S.

                                          Helensbury, Sydney, Australia

                                           Sengkang, Singapore

                                           Pearland, Texas, U.S.

                                          Irwing, Texas, U.S.

                                          New Jersey, U.S.

                                           Auckland, MA.  U.S.

                                          Pittsburg, U.S.

                                          South Florida, Inc. FL. U.S.

                                          Melbourne, Australia

                                          Murugan temple, LONDON, U.K.

                                          Rock Island, IL.  U.S.

                                          Tennessee, U.S.

                                            Little India, Seregoon Road, Singapore

                                           Famous Glass Temple, Malasia